ஜோதிடம்: அதிக ஞாபக மறதி கொண்ட 3 ராசிகள்
ஒரு மனிதனுக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் சிலருக்கு இயல்பாகவே ஞாபகம் மறதி அதிகம் இருக்கும். அவர்கள் அதை வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்கள் அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதாலும் இவ்வாறான ஞாபகம் மறதி ஏற்படக்கூடும். அப்படியாக ஜோதிடத்தில் எந்த ராசியினர் அதிக ஞாபக மறதி கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியினர் எப்பொழுதும் ஏதேனும் ஒரு சிந்தனையில் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒன்றைப் பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுதே மற்றொன்று சிந்திக்க தொடங்குவார்கள். ஆதலால் அவர்களுக்கு சுற்றி நடப்பதை பற்றி சிந்தனை குறைகிறது, அவர்களிடம் ஏதேனும் சொன்னால் கூட அதை மறக்க நேர்கிறது. இவர்களிடம் ஒரு விஷயத்தை நாம் சொல்லிவிட்டால் அதை அவர்களுக்கு பலமுறை ஞாபகப்படுத்தினால் மட்டுமே அந்த விஷயத்தை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் எப்பொழுதும் குடும்பத்துடன் அதிக பிணைப்புக் கொண்டவர்கள். மேலும் இவர்கள் எப்பொழுதும் தன்னுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆதலால் இவர்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தை சொன்னால் சமயங்களில் அதை அவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் ஒரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் சுற்றி உள்ளதை முழுவதுமாக மறக்கிறார்கள்.
மேஷம்:
மேஷ ராசியினர் பொறுத்தவரை எப்பொழுதும் அவர்களைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள். ஆதலால் நம்மைப் பற்றி ஒரு விஷயம் அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்றால் பெரும்பாலும் அதை அவர்கள் மறந்து விடுவார்கள். இவர்களை பொறுத்தவரை சுற்றி உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நெருங்கிய உறவுகளின் பிறந்தநாள் அல்லது திருமண தினத்தையும் இவர்கள் மறந்து விடுவது உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







