நீங்க பிறந்த தேதி இதுவா? சூப்பர் ஸ்டார் போல் வாழ்க்கையில் ஜொலிப்பீர்களாம்

By Sakthi Raj Aug 19, 2025 11:44 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாகும். நாம் எவ்வாறு ஜாதகத்தை வைத்து ஒருவருடைய வாழ்க்கையை கணிக்க முடிகிறதோ, அதே போல் எண் கணிதம் கொண்டு ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை நாம் சரியாக கணித்து விடலாம்.

அந்த வகையில் ஒரு சில எண்ணில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான பாக்கியமும் ஒரு சிறந்த செல்வாக்கோடு வாழும் நிலையும் இருக்கும்.

உதாரணமாக நாம் திரை துறையில் சாதனை படைத்த நடிகரான ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டால் அவருடைய வயது 74 என்ற பொழுதிலும் இன்றளவும் அவர் தனித்துவமாக இருந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார், பெயரும் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நீங்க பிறந்த தேதி இதுவா? சூப்பர் ஸ்டார் போல் வாழ்க்கையில் ஜொலிப்பீர்களாம் | People Born On This Date Become Rich In Tamil 

அவர் பிறந்த தேதி டிசம்பர் 12 1950 . அனைத்தையும் கூட்டினால் மூன்று என்ற எண் வரும். பொதுவாகவே இந்த எண்ணில் பிறந்த நபர்கள் சக மனிதர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கோடும் வாழ்வார்கள்.

அப்படியாக மூன்று என்ற எண் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.    பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்களை எளிதில் ஒரு விஷயத்திற்கு நாம் ஒத்துக் கொள்ள வைக்க முடியாது.

அதேபோல் இவர்கள் ஒன்றை நினைத்து விட்டார்கள் என்றால் அதை சாதிக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். இவர்கள் பிறரை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. எப்பொழுதும் தன்னுடைய முன்னேற்றம் தன்னுடைய பாதையை எவ்வாறு வழி வகுத்து நடக்க வேண்டும் என்று அதற்கான தேடுதலில் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள்.

சனி பகவானை கோபப்படுத்தும் ஐந்து வார்த்தைகள்- மறந்தும் இதை சொல்லாதீர்கள்

சனி பகவானை கோபப்படுத்தும் ஐந்து வார்த்தைகள்- மறந்தும் இதை சொல்லாதீர்கள்

இந்த தேடுதலே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கிறது. மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் முதல் கட்டம் சிறு தோல்விகளை கொடுத்தாலும் அந்தத் தோல்வி இவர்களுக்கு வருங்காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும். சமயங்களில் குடும்பத்தை விட்டு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவும் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய கடமையிலிருந்து இவர்கள் எப்பொழுதும் மீற மாட்டார்கள்.

இவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஒரு சில பரிகாரங்கள் செய்யலாம். அதில் இவர்கள் குரு பகவானை மகிழ்விக்க விஷ்ணு பகவான் ஆலயம் சென்று வழிபாடு செய்தலும், விஷ்ணு பகவானுடைய விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தலும் இவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US