சனி பகவானை கோபப்படுத்தும் ஐந்து வார்த்தைகள்- மறந்தும் இதை சொல்லாதீர்கள்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். சனி பகவான் பொருத்தவரையில் ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு ஏற்ப அவர்களுக்கு நற்பலன்களும் தீய பலன்களும் கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பவர்.
வாழ்க்கையில் நாம் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்பது கோள்களிடமிருந்து மட்டும் நாம் என்றும் தப்பிக்கவே முடியாது. அதில் முக்கியமான கிரகம் சனி பகவான். அப்படியாக சனி பகவானுக்கு ஒரு சில செயல்கள் மிகவும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது.
அதை செய்தால் சனிபகவான் மிகுந்த கோபம் கொண்டு அந்த நபருக்கு தக்க தண்டனையும் பாடத்தையும் வழங்குவார் என்கிறார்கள். அந்த வகையில் சனி பகவானை கோபப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
1. நேர்மையாக இருக்கும்நபரை தான் சனி பகவான் விரும்புகிறார். ஆனால் போலியான முகம் கொண்டு நடித்து பிறரை ஏமாற்றி வாழும் நபரை சனி பகவான் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அதேசமயம் தான் ஒரு தவறு செய்துவிட்டு அந்தத் தவறை மறைப்பதற்காக பிறர் மீது வீண்பழி சுமத்தினாலும் சனிபகவானுக்கு பிடிப்பதில்லை.
2. சனி பகவானுக்கு பிறரை கேலி செய்வதும் அவமானம் செய்வதும் பிடிப்பதில்லை. பிறருடைய மனநிலை அறியாமல் உண்மைத்துவம் தெரியாமல் ஒருவரை காயப்படுத்தினாலும் அவருடைய கோபத்திற்கு ஆளாக கூடும்.
3. ஒருவர் தனக்கு சாதகமாக செயல்படவில்லை என்று அவர்களை துன்புறுத்துவதும் அவர்கள் மீது பின் பழி சுமத்துவதும் அவர்களை சபிப்பதும் சனி பகவான் உடைய கோபத்திற்கு ஆளாக்ககூடும்.
4. சனி பகவானுக்கு ஒரு பொழுதும் பிறரை மதிக்காத குணம் பிடிப்பதில்லை. ஒருவருடைய உதவியால் நாம் ஒரு வளர்ச்சி அடைகின்றோம் அல்லது அவரால் நமக்கு ஒரு நன்மை நடக்கின்றது என்றால் அவர்களுக்கு நாம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். மாறாக அவர்களை தூக்கி எறிந்து செல்வது சனிபகவானுடைய தண்டனைக்கு ஆளாக்ககூடும்.
5. சனிபகவானுக்கு எப்பொழுதும் ஒருவர் ஆணவத்தோடு செயல்பட்டு பிறரை அவமதிப்பது பிடிப்பதில்லை. தன்னுடைய அதிகாரத்தாலும் பணத்தாலும் ஒருவரை துன்புறுத்துகிறார்கள் என்றால் சனிபகவான் அவர்களுக்கு தக்க பாடத்தை வழங்குவார்.
சனி பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்கள்:
ஒரு மனிதனுக்கு அவன் வாழும் காலகட்டங்களில் சனி மகா தசை 19 காலம் நடக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தீய செயல்கள் சொற்கள் பயன்படுத்தினால் அவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக ஜென்ம ராசி 4, 7, 10 ஆகிய இடங்களில் சனி பகவான் நிற்கும் பொழுது அவர்கள் இன்னும் சவால்களை சந்திக்க கூடும். சனிபகவான் எப்பொழுதுமே ஒருவருடைய கடந்த கால வாழ்க்கையை ஆராய்ந்து தான் அவர்களுக்கு தண்டனையும் வெற்றியும்வழங்குகிறார். அப்படியாக சனி பகவானுடைய தாக்கத்திலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள சில விஷயங்களை பின்பற்றினால் தப்பிக்கலாம் என்கிறார்கள்.
அதில் இன்பம் துன்பம் எதுவாக இருப்பினும் சமநிலையோடு இருப்பதும், பொருட்கள் மீது அதிக ஆசை கொள்ளாமல் இருப்பது, ஆணவத்தோடு செயல்படாமல் இருப்பதுமே சனிபகவானின் மகிழ்விக்கும் செயலாகும்.
இதோடு சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது கருப்பு துணி கடலை ஆகியவற்றை தானம் செய்வது சனி பகவானுடைய மந்திரங்களை ஜெபிப்பது ஹனுமன் வழிபாடு செய்வது போன்றவை சிறந்த பரிகாரமாக இருக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







