மூத்த பிள்ளைக்கு திருமண தாமதம்? இளைய பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

By Sakthi Raj Jun 10, 2025 05:42 AM GMT
Report

  ஜோதிடம் என்பது எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்பதை தாண்டி ஜோதிடத்தை கற்றுக்கொள்ள நமக்கு வாழ்க்கையை பற்றி நல்ல புரிதல் உண்டாகும். மேலும், ஜோதிடத்தில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்.

அந்த வகையில் ஒருவர் குடும்பத்தில் நீண்ட வருடமாக மூத்த பிள்ளைக்கு திருமண வரன் தேடி அமையவில்லை, ஆனால் இளைய மகனுக்கு திருமண வரன் வருகிறது? அப்படியாக, இளைய மகனுக்கு முதலில் திருமணம் நடத்தி வைக்கலாமா?

மூத்த பிள்ளைக்கு திருமண தாமதம்? இளைய பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கலாமா? | Can We Do Wedding For 2Nd Child Before 1St Born

மேலும், இளைய மகனுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது உண்மையா? என்பதை பற்றி பார்ப்போம். இந்த உலகம் யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்து வைத்திருக்கிறது.

நாம் தான் மனிதர்கள் இங்கு தனி வீடு குடும்பம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் நாம் இறைவனின் பார்வையில் நாம் அனைவரும் ஒரு வயிற்று பிள்ளைகளே. அந்த வகையில் இந்த மனிதர்களின் பிறப்பே கர்ம வினைகளை கழிப்பதற்காகவே எடுக்கப்பட்டது.

உங்களின் அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? இதோ உங்கள் கிழமையை வைத்து தெரிந்து கொள்ளுஙகள்

உங்களின் அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? இதோ உங்கள் கிழமையை வைத்து தெரிந்து கொள்ளுஙகள்

பூமியில் மனிதன் எவ்வளவு அடம்பிடித்தாலும், அவனுடைய கர்ம வினைகளில் இருந்து அவன் ஒரு பொழுதும் தப்பிக்கவே முடியாது என்பது தான் உண்மை. அதன் அடிப்படையில் நாம் சில வீடுகளில் பார்த்து இருப்போம், மூத்த பிள்ளைக்கு திருமண வரன் தேடி அமையாமல் இருக்கும்.

ஆனால் இளைய பிள்ளைக்கு வரன் வந்து கொண்டே இருக்கும். இதற்கு எல்லாம் அவர் அவர் தனி ஜாதகத்தை பொறுத்தது மட்டுமே. இன்னும் சிலர் இளைய பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தால் விரைவில் மூத்த பிள்ளைக்கு திருமணம் நடக்கும் என்று சொல்லுவார்கள், அவ்வாறு நடப்பதையும் பார்க்கலாம்.

மூத்த பிள்ளைக்கு திருமண தாமதம்? இளைய பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கலாமா? | Can We Do Wedding For 2Nd Child Before 1St Born

இளைய பிள்ளைக்கு வரன் பேசி முடித்திருப்பார்கள் கூடவே மூத்த பிள்ளைக்கும் நல்ல வரன் தேடி வரும். சில வீடுகளில் எவ்வளவு தேடியும் வரன் அமையாததை நாம் பார்க்க முடியும். அப்படியாக, இதை செய்தால் அது நடந்து விடும் என்று கணக்குகள் ஒரு சில இடங்களில் மட்டுமே பொருத்தும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாகவே இருந்தாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரே போல் அமைவது இல்லை. எல்லாம் ஆண்டவன் கணக்கு. நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம் கடமை.

அதை தவறாது செய்து வந்தாலே பிரபஞ்சம் நமக்கு கொடுக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் சரியான நேரத்தில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஆதலால், மனதை குழப்பி கொள்ளாமல் வருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வைத்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US