அசைவ உணவு சாப்பிட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?
இறைவன் எல்லோருக்கும் சமமானவர்.கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யாவிட்டாலும் வீட்டில் தினமும் வழிபாடு மேற்கொள்வோம்.வீடு என்று எடுத்துக்கொண்டாலும் பூஜைகளை சரியான முறையில் நாம் பின்பற்ற வேண்டும்.
மேலும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யவேண்டும் என்றால் நாம் அசைவம் சாப்பிடமாட்டோம்.அதே போல் அசைவம் சாப்பிட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
கோயிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.காரணம், அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. மந்த நிலைமை காணப்படும்.
இந்த மந்த நிலைமையில் மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி கடவுளை வேண்டி கொள்ள முடியாது.ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தாலே, அங்குள்ள பிராண சக்தியை அனைவராலும் எளிதில் உணரமுடியும்.ஆனால், அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களால் இப்படி பிராண சக்தியை உணர முடியாது.
அதனால் தான் கோயிலுக்கு செல்லும் பொழுது எளிமையான உணவுகளை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதே போல் சில வீடுகளில் அசைவம் சமைக்கும் பொழுது அன்றைய தினம் விளக்கு ஏற்ற மாட்டார்கள்.ஆனால் வீட்டில் தினமும் தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது தான் நியதி.
ஆக அசைவம் சமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் சமைப்பதற்கு முன் காலையில் குளித்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விடலாம்.மேலும் அசைவம் உணவு சமைப்பதால் வாரம் ஒரு முறை சாம்பிராணி தூபம் காண்பிப்பது மிக அவசியம்.அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி வீடு தூய்மை அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |