அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்லலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன
பொதுவாக, நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது பரிந்துரைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் நாம் அசையும் சாப்பிட்ட பிறகு திடீர் என்று ஆலயம் செல்லக்கூடிய நிலைமை வரலாம்.
அவ்வாறான வேளையில் நாம் என்ன செய்வது? அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்ல கூடாது என்கின்ற நிலை இருக்கின்ற பட்சத்தில் நாம் அந்த நிலையை எப்படி கையாள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
ஏன் கோயிலுக்கும் செல்லும் முன் சைவ உணவு சாப்பிட வேண்டும்?
நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜை செய்வதற்கு முன்பாகவே சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இறை தரிசனம் செய்யும் பொழுது நம்முடைய உடலும் மனமும் சுத்தமாக மென்மையாக இருத்தல் வேண்டும். காரணம், உணவிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது.

நாம் உண்ணக்கூடிய உணவு நம்முடைய உடலில் மட்டுமல்லாமல் மன நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆயுர்வேதம், யோகம் மற்றும் பல ஆன்மீக மரபுகள் சொல்கின்றன. பொதுவாக, உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன, சாத்வீக உணவு நமக்கு மன அமைதியை கொடுக்கக் கூடியதாகவும், ராஜச உணவு நமக்கு உற்சாகம் மற்றும் வேகத்தை அதிகரிப்பதாகவும், தாமச உணவு நமக்கு உடலில் கனத்த தன்மையை ஏற்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆதலால், பழங்கள் காய்கறிகள், பால் தயிர் பருப்பு வகைகள் போன்றவை சாத்வீக உணவுகளாகவும் தியானம் ஜெபம் பூஜை போன்ற நேரங்களில் சாத்வீக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே நமக்கு மனதில் அமைதியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
அசைவம் சாப்பிட்டால் இறைவழிபாடு செய்யமுடியதா?
இங்கு நமக்கு அசைவ உணவை சாப்பிட்டு இறைவனை வழிபாடு செய்ய முடியாதா? என்று கேள்வி எழும்பும். பாரம்பரிய மரபுகளின் அடிப்படையில் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு முன்பாக அசைவ உணவை தவிர்ப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் அவை மன ஒருமைப்பாட்டை குறிக்கிறது.

அதாவது, கோவிலுக்கு செல்லும் பொழுது மனம் அமைதியாக இருந்து இறைவனை மட்டுமே மனதில் நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். பிறகு வழிபாட்டு ஒழுக்கமாக பல பக்தர்கள் தரிசனத்தை விரதமாக தருகின்றன.
அதனால், அன்று காலை முதல் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். தவறான சொற்கள், பேசாமலும் கோபம் கொள்ளாமலும் இருக்கிறார்கள். உடல் மற்றும் மனத் தூய்மை என்பது உடல் மட்டுமல்ல நம்முடைய மனதையும் குறிக்கிறது.
பல சித்தர்கள் யோக மரபுகள் ஆன்மீக சாதனைகள் முன்னேற விரும்பக் கூடியவர்கள் இந்த சாத்வீக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் பொழுது மனதில் அமைதியும் மென்மையான குணமும் ஏற்படும் என்று சொல்கிறார்.
அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
அந்த வகையில் திடீரென்று நீங்கள் வீடுகளில் அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு விட்டீர்கள் ஆனால் கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை வருகிறது என்றால் நீங்கள் எந்த ஒரு பதட்டமும் அடையாமல் குடும்பத்துடன் நன்றாக குளித்து சுத்தமான ஆடை உடுத்தி வீடுகளில் விளக்கேற்றி சற்று நேரம் அமர்ந்து பிறகு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |