வீட்டில் கருப்பு நிற செல்லப்பிராணிகள் வளர்த்தால் தீய சக்திகள் விலகுமா?
நிறங்களில் கருப்பு நிறத்திற்கு எப்பொழுதும் தனித்துவம் உண்டு.அப்படியாக நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியை இந்த கருப்பு நிறம் அகற்று விடுகிறது.மேலும்,நம் வீடுகளில் கருப்பு நிற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் வழங்குகிறது.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே,வீட்டில் சில உயிரினங்கள் வளர்ப்பதால் நமக்கு வீட்டில் ஒருவகை பாதுகாப்பு கிடைக்கிறது.வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பொழுது நம் வீட்டில் வரும் ஆபத்துகளை தடுக்கிறது.
மேலும்,நம் வீட்டில் உள்ள பொறாமைகள் எதிர்மறை ஆற்றல் விலகும்.அதே போல் முந்தைய காலத்தில் கருப்பு நிற பிராணிகளான ஆடு, மாடு, கோழிவளர்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோவிலுக்கு நேர்ந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
இவ்வாறு செய்யும் பொழுது அந்த பிராணிகளை அவர்கள் வீட்டில் உள்ள கண்திருஷ்டியை வெளியே எடுத்து சென்று விடும் என்று நம்பப்படுகிறது. வீடுகளில் திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற தோஷங்கள் இருப்பவர்கள் வீட்டில் கருப்பு நிற பிராணிகளை வளர்ப்பதால் அவர்களுக்கு உண்டான தோஷங்கள் முற்றிலுமாக விலகும் என்று சொல்லப்படுகிறது.
அதே போல் அந்த தோஷம் விலகிய பின்பு அவர்கள் அந்த பிராணிகளை வீட்டில் வைத்து கொள்ளாமல் பிறருக்கு தானம் வழங்கிடவேண்டும். மேலும்,நம் கைகளில் நிற கயிறு காட்டுவதே நம்முடைய திருஷ்டி விலகுவதற்காக.அதே போல் வீட்டில் கருப்பு நிற செல்ல பிராணிகளை வளர்க்கும் பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் கண்திருஷ்டி விலகும் என்று நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |