ஜோதிடம்:எந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம்
12 ராசிகளும் ஒவ்வொரு குணாதிசியங்கள் மற்றும் தனித்திறமை கொண்டவை.ஒரு ராசியை வைத்து அவர்கள் எப்படி பட்ட மனிதர் என்பதை ஓரளவு கணித்து விடலாம்.இருந்தாலும் சில ராசிக்காரர்களை என்ன செய்தாலும் அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.அப்படியாக எந்த ராசிக்காரர்களை நாம் புரிந்து கொள்வது கடினம் என்பதை பற்றி பார்ப்போம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் மிகவும் கடினமான உழைப்பாளி என்றாலும் அவர்களை நாம் புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் கொள்ளவேண்டியது இருக்கும்.அதாவது அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.நிறைய விஷயங்களை மறைத்து பேசுவார்கள்.ஆதலால் இவர்களுடன் பயணம் செய்வது மிகுந்த கஷ்டம் கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் யதார்த்தமான குணம் படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் ஒரு விஷயத்தை தீர யோசித்து ஆராய்ந்து செயல்படக்கூடியவர்கள்.இவர்கள் அதிகம் பிறரிடம் பேசமாட்டார்கள்.உணர்ச்சிகளை அவர்களுடனே வைத்திருப்பார்கள்.ஆதலால் அவர்களை புரிந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இயல்பாவே சுற்று சூழலை அதிகம் கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள்.ஆதலால் எல்லாம் புரிந்து கொண்டு மிகவும் அமைதியாக இருப்பார்கள்.இவர்களை பிறர் எளிதில் தவறாக மதிப்பிட கூடும்.இவர்களை புரிந்து கொள்வது மிக மிக கடினமான ஒன்று.அவர்களை விரும்பியவர்கள் நெருக்கமானவர்கள் மட்டுமே அவர்களுடன் நல்ல விதமான தொடர்பில் இருக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |