குலதெய்வ படத்தை வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாமா?
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் உரியதாக உள்ளது. அந்த குலதெய்வத்தை நாம் மனதார வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள தோஷங்கள் யாவும் விலகும்.
அந்த வகையில், குலதெய்வத்தினுடைய படத்தை நாம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாமா? மேலும், உக்கிர தெய்வங்கள் யார்? அவர்களை வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
பொதுவாக உக்கிர தெய்வம் என்று சொல்லக்கூடிய காளி, வராகி அம்மன், துர்க்கை அம்மன், சண்டி முனி, கருப்பசாமி போன்ற தெய்வங்கள் சிவபெருமானால் தீய சக்திகளை அழிக்க உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
மேலும், இந்த குலதெய்வங்களை யார் மனதார வேண்டி வழிபாடு செய்தாலும் அவர்களுக்கு உடனடியான பலனை கொடுக்கக் கூடிய தெய்வமாக இருக்கிறார்கள். அதனால் உங்கள் வாழ்க்கையில் தீராத கவலைகள், பிரச்சனைகள், எதிரிகள் தொல்லை, கடன் நெருக்கடி என்றிருக்கின்ற நேரத்தில் மனம் உருகி உக்கிர தெய்வங்களை சரணடையும் பொழுது உடனடியான மாற்றங்களை நாம் பெறலாம்.
மேலும், குலதெய்வத்தின் புகைப்படத்தை வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாம். அது சிறந்த பலனை கொடுக்கும். அதோடு குலதெய்வத்தின் பிடி மண்ணை வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அது பாதுகாப்பாக அமையும்.
அதோடு, குலதெய்வம் மகிமைகளை பற்றியும் உக்கர தெய்வங்களின் மகிமைகளை பற்றியும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பாலாறு சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |