எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கைநீட்டி உதவி கேட்காத ராசிகள் யார் தெரியுமா?
நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். எவ்வளவு துன்பம் என்றாலும் அவர்கள் ஒருவரிடம் கைகளை நீட்டி உதவி என்று கேட்க மாட்டார்கள். அப்படியாக, எந்த சூழ்நிலையிலும் கைநீட்டி உதவி என்று கேட்காத அமைப்பு கொண்ட ராசிகள் யாரென்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசியை பொறுத்தவரை இவர்கள் எப்பொழுதும் சுயமரியாதை சற்று அதிகமாகக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஏதேனும் தவறாக நினைத்து விடக்கூடாது யாரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது என்று கடினமாக உழைக்கக்கூடியவர்கள். யாருடைய உதவியும் நாட மாட்டார்கள்.

மேஷம்:
இவர்கள் மிகுந்த தன்மானம் உடையவர்கள். எப்பொழுதும் நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற நினைக்கக் கூடியவர்கள். ஒருவரிடம் உதவி கேட்டுதான் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் கட்டாயம் அந்த காரியத்தை கூட இவர்கள் கைவிடுவார்கள் தவிர்த்து உதவி என்று நாடமாட்டார்கள்.
விருச்சிகம்:
இவர்களுக்கு உதவி என்று கேட்கவே பிடிக்காது. யாரிடமும் எனக்காக இதை செய்து கொடுங்கள் என்று போய் நிற்க மாட்டார்கள். யாரையும் சார்ந்து அவர்களுடைய இடத்தை விட்டுக் கொடுத்து பேசுவதில் இவர்களுக்கு துளியும் விருப்பம் இருக்காது.
ரிஷபம்:
இவர்களைப் பொறுத்தவரை நாம் ஒருவரிடத்தில் நல்ல மரியாதையான பிணைப்பு கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். உதவி என்று கேட்டால் அந்த மரியாதை சென்றுவிடுமா என்று அச்சம் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்கள் எவ்வளவு பெரிய கடினமான காலங்களாக இருந்தாலும் நெருங்கியவர்களிடம் கூட உதவி என்று நிற்க மாட்டார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |