ஆந்தையின் படத்தை வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் தேடி வருமா?
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றோம். மேலும், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விலங்குகள் வாகனமாக இருப்பதை நாம் காண முடியும்.
அந்த வகையில் லட்சுமி தேவியின் வாகனமான ஆந்தையை வீடுகளில் வைப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஆந்தை நேர்மறை சக்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஆந்தையின் படத்தை வீடுகளில் வைப்பதால் நமக்கு பல நன்மைகள் நடைப்பெறுகிறது. அதாவது ஆந்தையை வீடுகளில் வைக்கும் பொழுது நம் வீட்டின் மீதும் நம் மீதும் உள்ள தீய கண்கள் விலகி நமக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது.
அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. மேலும், நாம் தொழில் செய்யும் இடங்களில் ஆந்தையின் படத்தை வைப்பது நமக்கு சிறந்த வெற்றியை கொடுக்கிறது. அதாவது நம்முடைய கடை அல்லது அலுவலகத்தில் ஆந்தையின் படத்தை வைப்பதால் அந்த இடம் நேர்மறை சக்திகளால் சூழப்படுவதாக சொல்கிறார்கள்.
நாம் ஆந்தையின் படத்தை வீடுகளில் வைக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அந்த படத்தை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது தான் மங்களகரமானதாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆந்தை படத்தை வாங்கும் பொழுது பிறரை பயம்முறுத்தும் வகையில் படத்தை வாங்கி மாடக்கூடாது. அதே போல் ஆந்தையை வழிபாடு செய்ய சிறந்த நாளாக தீபாவளி திருநாள் இருக்கிறது.
அன்றைய தினம் ஆந்தையை வழிபாடு செய்வதால் நம் வீடுகளில் லட்சுமி தேவியின் அருளால் செல்வ செழிப்புகள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |