விதியை மதியால் வெல்ல முடியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இதோ
இந்த பிரபஞ்சம் என்பது மிக சுவாரசியமான ஒன்று. இங்கு கண்களுக்கு தெரியாத பல சக்திகள் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதாக நாம் எல்லோருமே தீர்க்கமாக நம்புகிறோம். அதற்கு சான்றாக இந்த பிரபஞ்சத்திலும் நிறைய விஷயங்களை நம் கண்களுக்கு முன்னால் பார்த்து வருகின்றோம்.
அப்படியாக, இங்கு நிறைய கேள்விகள் நமக்கு விடை தெரியாமல் இருந்து கொண்டிருப்பதையும் நாம் கவனிக்க முடிகிறது. அந்த வகையில் விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற ஒரு கேள்வி நம்மை பல நேரங்களில் ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது.
உண்மையாகவே ஒரு மனிதன் விதியை மதியால் வெல்ல முடியுமா? அவ்வாறு விதியை மதியால் வெல்ல வேண்டும் என்றாலும் அதற்கான விதி இருக்க வேண்டுமா? என்பதை பற்றி பார்ப்போம். இந்த உலகத்தில் கிரகங்களுடைய வேலையே ஒரு மனிதனுடைய கர்ம வினைகளை அவர்களுக்கு சரியாக கொடுத்து ஒரு நல்ல பாடம் கற்றுக் கொடுப்பதுதான்.

ஆக இந்த கர்மவினைக்கு பரிகாரங்களால் செய்து தீய தாக்கத்தை குறைக்க முடியுமா?என்ற கேள்விகளும் இருக்கும். அதாவது இந்த கர்மவினைகளால் அல்லது தோஷங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாம் கோவில் கோவிலாக சென்று இறைவழிபாடு செய்து அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியுமா என்ற ஒரு கேள்வியும் நமக்குள் இருக்கும்.
அப்படியாக, இந்த உலகத்தில் ஒரே ஒரு உண்மை மட்டும் இருக்கிறது. "விதியை மதியால் வெல்ல முடியுமா" என்று ஒரு கேள்விக்கு விடை யாராலும் சரியாக சொல்ல முடியுமா? என்பதை காட்டிலும் "விதியை ஒருவர் செய்த புண்ணியத்தால் வெல்ல முடியும்" என்றே நமக்கு இந்த பிரபஞ்சம் நமக்கு பல நேரங்களில் உணர்த்துகிறது.
அதாவது விதியை வெல்வதற்கு அந்த இக்கட்டான நிலையில் நம்முடைய மதியானது வேலை செய்ய வேண்டும். ஆனால் மதியானது வேலை செய்யாமல் தடுப்பதற்காகவே விதியான கிரகம் அங்கு நமக்கு சூழ்ச்சியை செய்ய காத்து நிற்கும்.
ஆக கர்ம வினை நம்மை சூழ்ந்து அதற்கான தண்டனையை கொடுக்கும் நேரத்தில் மதியானது நமக்கு துணை நிற்குமா என்பது பிரபஞ்ச சக்தியையும் மீறி நடக்கக்கூடிய ஒரு செயல். ஆனால் நாம் செய்தா புண்ணியமானது அங்கு எல்லாம் மீறி நம்மை காக்கக்கூடிய ஒரு கவசமாக மாறுகிறது. அதனால் தான் பரிகாரங்களில் தானம் தர்மம் செய்ய வேண்டும் என்றும் சொல்வது உண்டு.

ஆதலால் தான் ஒருவர் தான தர்ம காரியங்களில் ஈடுபடும் பொழுது அந்த கிரகமானது சரி இவன் ஏதோ ஒரு நிலையில் இருந்து கீழே இறங்கி நல்லதை செய்ய முயல்கிறான். ஆக அவனுக்கான தண்டனையை நாம் குறைப்பது பற்றி யோசிப்போம் என்று ஒரு நிலைக்கு வருவார்கள்.
ஆக, இங்கு எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், ஞானிகளுக்கே பாடம் கற்பிக்கக் கூடிய அறிவாளியாக இருந்தாலும் பூமியில் வாழக்கூடிய உயிர்களுக்கு நீங்கள் நன்மை செய்யாமலும், உங்களுடைய வாழ்க்கையில் புண்ணியம் சேர்க்காமலும் எந்த விதியையும் நீங்கள் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் வெல்ல முடியாது என்பதே உண்மை.
அதனால் விதியை மதியால் வெல்ல முடியுமா என்பதைக் காட்டிலும் இந்த உலகத்தில் விதியை ஒருவர் செய்த புண்ணியத்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று மிக தீர்க்கமாக உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |