பொதுவாக ருத்ராட்சம் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும். இதனை சிவ பக்தர்கள் அதிகமாக அணிவார்கள்.
வயதிற்கு வந்த பெண்கள், திருமணமான பெண்கள் இதனை அணியக் கூடாது என முன்னோர்கள் மத்தியில் ஒரு கூற்று இருந்தது.
திருநீறு, ருத்ராட்சம், பஞ்சாட்சரம் (ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்களாக பார்க்கப்படுகின்றது.
இந்த ருத்ராட்சம் மாலை அணிய வேண்டும் என்றால் அதற்காக ஏழு ஜென்மங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என மகிமை அறிந்தவர்கள் கூறுவார்கள்.
வழிபாடுகள், கலாச்சாரங்கள் இப்படி அனைத்திலும் வேறுபாடு பார்க்கும் மனிதர்கள் இந்த மாலையை மாத்திரம் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அணிவார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ருத்ராட்சம் உருவான கதை
சிவபெருமான் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக பல ஆண்டுகளாக மூடாமல் இருந்த கண்களை மூடும் பொழுது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது.
இந்த கண்ணீர் பூமியில் விழுந்து தான் ருத்ராட்சம் உருவானது என புராணங்கள் கூறுகின்றது. இதனை அணிவதால் பக்தியுடன்தேடி வருபவர்களை எப்பொழுதும் கண் போல் சிவன் காப்பார் என பொருட்படுகிறது.
பெண்கள் அணியலாமா?
பொதுவாக பெண்கள் நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் போன்ற சந்தர்ப்பங்கள் ருத்ராட்சம் அணியக் கூடாது என பலரும் கூறுவார்கள்.
ஆனால் ருத்ராட்சம் யார் வேண்டுமென்றாலும் அணியலாம். அதற்கு காலம், நேரம் அவசியமில்லை. இப்படி அணிவதால் எந்தவித தோஷங்களும் வரப்போவதில்லை என பதிவுகள் தெரிவிக்கின்றன.