வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் பூனை - எப்படி தெரியுமா?
நல்ல காரியதத்திற்கு செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணமாக கருதப்படுவது வழக்கம்.
எதிர்காலத்தில் நிகழவிருப்பதை முந்தைய காலத்திலேயே பூனை கணித்து விடுவதால், பூனை குறுக்கே வருவதை பலரும் பயப்படுவது வழக்கம்.
ஒரு சிலர் பூனை என்றாலே அபசகுணம் என நினைப்பார்கள்.
ஆனால் பூனை நல்ல பலன்களையும் மாறி மாறி வழங்குகிறது எனலாம். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நல்லதை தரும் பூனை
தீபாவளி அன்று பூனை வீட்டிற்கு வருவது நல்லதாகவும் இதனால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதாகவும் கருதப்படுகிறது.
பூனை ராகுவின் வாகனமாகக் கருதப்படுவதால் ராகுவின் பார்வை நன்றாக இல்லை என்றால் பூனையை வீட்டில் வளர்க்கலாம்.
இல்லையேல் பூனையின் முடியை சிவப்பு துணியில் கட்டி உங்களுடன் வைத்திருந்தால் காலசர்ப தோஷம் மற்றும் பில்லி சூனியம் ஆகியவை நீங்கும்.
யாருக்கும் தெரியாமல் பூனை வீட்டிற்குள் வந்து பால் குடித்தால் உங்களது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நீங்கள் வெளியே செல்லும் போது பூனை இறைச்சியை கௌவியப்படி வந்தால், செய்யும் காரியத்தில் பெரும் வெற்றியை பெறலாம்.
மேலும் நீங்கள் தூங்கும் போது பூனை உங்கள் தலையை நீக்கினால் அரசாங்க வழக்கில் ஈடுப்பட வாய்ப்பு உண்டு. காலில் நக்கினால் இனி வரும் காலங்களில் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என அர்த்தம்.