வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்தாம்!
பொதுவாக வீட்டில் ஏதாவது நிதி நெருக்கடி வரப்போகிறது என்றால் அதனை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் சாணக்கியர் நம் வாழ்வுடன் தொடர்புடைய பல நீதிமொழிகளை கூறியுள்ளார்.
அவருடைய நெறிமுறைகளை பார்க்கும் பொழுது எமது இலக்குகளை எப்படி அறியலாம்? எமக்கு தீமை செய்கிறவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பவை தானாகவே விளங்கிக் கொள்ளலாம்.
இதனாலேயே பலர் சாணக்கிய வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
அப்படியாயின் நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கி விட்டதை என்னென்ன அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கெட்ட சகுணத்தை உணர்த்தும் சாணக்கியர்
1. பொதுவாக பலரும் வீடுகளில் துளசி செடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனின் துளசி செடி நமக்கு வரும் கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும். இதனையே சாணக்கியர், துளசி செடி வீடுகளில் வாடினால் பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாகவும், எதிர்மறையான ஆற்றல்கள் சூழ்ந்திருப்பதாகவும் கூறுகிறார்.
2. உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறதா? இப்படியான சமயங்களில் லட்சுமி தேவியின் வரவு குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு பணக்கஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் உங்களுக்கான கெட்ட நேரம் அன்று முதல் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
3. வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை குறிக்கிறது. உடைந்த கண்ணாடி உங்கள் வீடுகளில் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
4. வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பூஜை அறையில் தான் இருக்கிறது. தினமும் தவறாமல் பூஜை செய்வதால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார் என சாணக்கியர் கூறுகிறார். பூஜை அறையில் தூசி படிந்திருந்தால் அது கெட்ட சகுணத்தை உணர்த்துகிறது.
5. பெரியவர்களை மதிக்காதவர்களின் வீடுகளில் லட்சுமி தங்கமாட்டார். இதனால் வீட்டில் இயற்கையாக இருக்கும் மகிழ்ச்சியும் இருக்காது. வீட்டிலுள்ள பெரியவர்களை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
முக்கிய குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை மாத்திரமே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |