சனிபகவானால் உண்டான அரிய ராஜயோகம்- திடீர் செழிப்பில் சில ராசிகள்
சனிபகவான் பயணத்தால் சச ராஜயோகத்தால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படவுள்ளது.
ஹோலி பண்டிகையான இன்று சந்திர கிரகணம் நிகழ்வதோடு, சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து, சச ராஜயோகத்தை உண்டாக்கியுள்ளார்.
இதனால் திடீர் நிதி ஆதாயம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகிறது. அவ்வாறு அந்த அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசிகள் எதெல்லாம் என்பது குறித்து பார்ப்போம்.
மேஷம்
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். எதிர்பாராத அளவில் நல்ல லாபம் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை பொங்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் நிலை உருவாகும்.
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.