நீங்கள் மகர ராசி லக்னத்தில் பிறந்த ஆண்களா? உங்களுக்கான வாழ்க்கை பலன் இதோ
ஜோதிடத்தில் சனிபகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் எப்பொழுதும் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். அந்த வகையில், மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்த ஆண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய குணநலன்கள் தொழில் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
மகர ராசியில் பிறந்த ஆண்கள் கடினமாக உழைக்கக் கூடியவர். மேலும், இவர்கள் பொறுமை நிதானத்தை கடைப்பிடிக்க கூடியவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு பழமையான விஷயங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். இருப்பினும் நவீன காலத்திற்கு ஏற்ப அவர்களை அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதும் உண்டு.
சனி பகவானுடைய ஆதிக்கம் இருப்பதால் இவர்களுக்கு எல்லா விஷயங்களும் சற்று வாழ்க்கையில் காலதாமதம் ஆகவும் நிலையானதுமாக கிடைக்கிறது. மகர ராசியினர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கி விட்டார்கள் என்றால் அதனை முடிக்கும் வரை இவர்கள் உறங்கமாட்டார்கள். மேலும், இவர்களுக்கு திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை கால தாமதமாக நடக்கக் கூடியதை நாம் பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு முதல் காதலை மறக்க முடியாத அனுபவமும் பிடிவாத குணமும் இருக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் இவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். மகர ராசி பொருத்தவரை இவர்களுக்கு சேமிப்பு பழக்கம் அதிகம் இருக்கும்.
குறிப்பாக 35 வயதிற்கு பிறகு இவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுகிறார்கள். இவர்களுக்கு குலதெய்வ வழிபாடுகளில் அதிக ஆர்வம் இருக்கும். இருப்பினும் வாழ்க்கையில் எல்லாம் காலம் கடந்து இவர்கள் கைகளுக்கு வருவதால் சில விரக்தி நிலையை இவர்கள் சந்திக்கிறார்கள்.
அப்படியாக, மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்த ஆண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |