ஜோதிடம்: 12 ராசிகளின் பிறவி குணம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 22, 2026 11:30 AM GMT
Report

ஜோதிடத்தை பொருத்தவரை 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அதாவது அது அவர்களுடைய பிறவி குணம் என்றே சொல்லலாம். அதை அவர்களிடம் நாம் அவ்வப்போது பார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. அப்படியாக பன்னிரண்டு ராசிகளுடைய பிறவி குணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியினர் எதிலும் அவசர குணம் கொண்டிருப்பார்கள். அவர்கள் மனமானது அதிவேகத்தில் செயல்பட கூடியதாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் மிகவும் அமைதியான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் ஆடம்பரத்தை அதிக அளவில் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஜோதிடம்: 12 ராசிகளின் பிறவி குணம் என்ன தெரியுமா? | Characterstics Of 12 Zodiac Sign By Birth

மிதுனம்:

மிதுன ராசியினர் மனநிலை எப்பொழுது எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. அவர்களை நம்பி எந்த காரியமும் செய்யவும் முடியாது.

கடகம்:

இவர்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். மனதில் ஒன்றை மறைத்து இவர்களுக்கு பேச தெரியாது.

சிம்மம்:

இவர்களிடத்தில் தலைமை பண்பும் தன்னம்பிக்கையும் அதிக அளவில் இருக்கும். எப்பொழுதும் ஒரு ஆளுமை அதிகாரத்துடன் இருப்பார்கள்.

கன்னி:

இவர்கள் சிறுவயதில் அதிக அளவில் பக்குவம் பெற்று விடுவார்கள். உதவி என்று ஒருவர் கேட்டு வரும் பொழுது தவிர்க்காமல் செய்யக்கூடியவர்கள்.

துலாம்:

துலாம் ராசியினர்பேச்சு இனிமையாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிக அளவில் அன்பு கொண்டிருப்பார்கள்.

ஜோதிடம்: 12 ராசிகளின் பிறவி குணம் என்ன தெரியுமா? | Characterstics Of 12 Zodiac Sign By Birth

விருச்சிகம்:

இவர்களுக்கு அதிக அளவில் கோபமும் பிடிவாத குணமும் இருந்தாலும் இவர்களிடம் ஒருவர் சொல்லக்கூடிய ரகசியத்தை இவர்கள் யாரிடமும் பகிர மாட்டார்கள்.

தனுசு:

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழு சுதந்திரத்தோடு வாழ விரும்பக் கூடியவர்கள்.

மகரம்:

இவர்கள் கடின உழைப்பாளி இருப்பினும் சிக்கனமாகவும் இருக்கக் கூடியவர்கள். நெருங்கியவர்கள் இவர்களிடம் எதிர்பார்ப்புகள் வைத்தால் அதை உடனடியாக நிறைவேற்ற கூடியவர்கள்.

கும்பம்:

மற்றவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மரியாதை கொடுத்து பழகக்கூடிய பக்குவம் பெற்று இருப்பார்கள்.

மீனம்:

இவர்களுடைய கற்பனையை நிஜமாக்க கூடிய ஆற்றல் கொண்டிருப்பார்கள். இரக்க குணம் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US