விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலை வாங்கும்போது இதை கவனிக்க மறந்துவிடாதீர்கள்
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் விநாயகர் சிலையை வாங்கி அதனை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
அப்படி விநாயகர் சிலையை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
விநாயகர் சிலையானது இயற்கை சார்ந்த பொருட்களான களிமண், மரம், கல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
இயற்கையுடன் தொடர்புடைய நிறங்களான மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்ட விநாயகர் சிலையை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
அதேபோல் விநாயகரின் துதிக்கை இடது பக்கம் திரும்பியதாக தான் சிலை இருக்க வேண்டும். அதுவே வீட்டில் செல்வத்தையும், நல்ல விஷங்களை உருவாக்கும்.
விநாயகர் சிலையின் அளவானது வீட்டின் பூஜை இடத்திற்கு ஏற்ற அளவாக இருக்க வேண்டும்.
விநாயகர் சிலையில் அவரது கை ஆசீர்வாதம் வழங்குவதை போலவே இருக்க வேண்டும்.
விநாயகர் சிலையில் உள்ள கண்கள் அவரது முகத்திற்கு சரியாக பொருந்துவதாக இருக்க வேண்டும். மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கக் கூடாது.
விநாயகர் சிலையின் அடித்தளமானது சரி சமமாக இருக்க வேண்டும். இதுவே நிலைத்தன்மையையும் ஏற்படுத்தும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |