ராகு கேது தோஷங்களை நீக்கும் சென்னை மயிலை முண்டககன்னி அம்மன்
ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி கிழமை எவ்வளவு சிறப்போ அதே போல் ஆடி செவ்வாய் கிழமையும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த நன்நாளாகவே கொண்டாடப்படுகிறது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் ஏராளமான பெண்கள் அம்மன் கோயில் வாளகத்தில் பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னையில் ஏராளமான அம்மன் கோயில் இருக்கிறது. அவற்றில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் புகழ் பெற்ற ஒன்று.
ரேணுகாதேவி அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், மயிலாப்பூர் திருத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மயிலாப்பூரில் இந்த அம்மன் எழுந்தருளி கோயில் அமைந்துள்ள தெருவின் பெயரே முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு என்பதுதான்.
அன்னையின் கோயில் வாசல் ராஜ கோபுரத்துடன் இருந்தாலும் அன்னை குடிகொண்டுள்ள கருவறை இன்றும் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான்.
கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை, ‘விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்’ என்ற பொருளில் ‘முண்டகக் கண்ணியம்மன்’ என்கின்றனர்.
அதோடு முண்டகம் என்றால் தாமரை என்று பொருள் .அம்பிகை தாமரை போன்ற கண்ணாள் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.
மேலும் ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் . கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.
அதோடு அம்மனை வழிபட தீராப் தீராப்பிணிகள் தீரும் , திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவளாக திகழ்கிறாள்.
முண்டகக்கண்ணணி அம்மன். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக் கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள்.
அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடி மாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு.
கோயில் வளாகத்தில் ஜமதக்கனி முனிவரின் சிலையும் உள்ளது கோயிலின் தொன்மையை உணர்த்துவதாக உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |