ஒரு மனிதனுக்கு வீரம் விவேகம் ஞானம் என்று மிகப்பெரிய ஆற்றலையும், மனோதிடத்தையும், பாதுகாப்பையும், செல்வவளத்தையும் தரக்கூடியது நரசிம்மர் வழிபாடு.
அதாவது பெருமாளின் தசஅவதாரங்களில் அன்று தோன்றி அன்றே நிறைவேறியது நரசிம்ம அவதாரம் மட்டுமே. அதனால் தான் நாளை என்பது நரசிம்மருக்கில்லை என்பார்கள்.
ஒரேநாளில் தன்னுடைய பக்தனுக்காக அவதாரம் எடுத்து,நடந்தேறிய நரசிம்மரை இறுக்கப் பற்றிக் கொண்டால் நிச்சயம் நமக்கான வழிகளை காண்பிப்பார் நரசிம்மர்.
நரசிம்மர் லெட்சுமி நரசிம்மராக அருள்பாலிப்பவர்.ஆதலால், மகாலெட்சுமி கடாட்சயத்தால் பணவரவு அதிகமாகும்.
தொழில் சிறக்கும் லாபம் கொழிக்கும். பக்தன் சிறுவன் பிரகாலாதனுக்காக காப்பற்ற அவன் பக்தியை காக்கும் பொருட்டு தூணிலிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்டவர் நரசிம்மர்.
பின் இரணியனை வதம் செய்து, யாராலும் சாந்தம் செய்ய இயலாமல், லெட்சுமி தேவி மெதுவாக வந்து மடியேறி அமர சாந்தம் கொண்டு அருள்பாலிப்பு செய்தவர் நரசிம்மர்.
அத்தகைய நரசிம்மரை பிரகலாதனைப் போல நாமும் இறுகபற்ற, உடனே நம்மை காப்பாற்ற வருவார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நரசிம்மர் திருவடி தஞ்சமானால் நம் அனைத்து தேவைகளையும் அவரே கவனித்துக் கொள்வார்.
செவ்வாய்க்கிழமை தோறும் நரசிம்மர் கோவில்களுக்கு மாலை 6-7மணிக்குள் தொடர்ந்து சென்று வர எல்லாம் சரியாகும். அந்த 6-7 தான் நரசிம்மர் வெளிப்பட்ட நேரம் என்பதால் அந்த நேரத்தில் கோவிலுக்குள் இருந்தாலே போதும்.
நரசிம்மரை எவர் ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறாரோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |