கோயிலுக்கு சென்றால் யார் பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும்?
நாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் பொழுது அர்ச்சனை செய்வதுண்டு.அப்படியாக நாம் இறைவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும்,அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத மொழியான அர்ச்சா என்ற வார்த்தையில் இருந்தே வந்ததாக வரலாறு. அர்ச்சா என்ற வார்த்தையின் பொருள் சிலை.
கடவுள் சிலையின் முன்பு மந்திரங்களை ஓதுவதால் அது அர்ச்சனை என்றாகிவிட்டது. அதாவது அர்ச்சனை என்பது வேதம் பயின்ற ஒரு நபர் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும்.
பொதுவாக கோயிலிற்கு செல்லும் பொழுது, பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர். இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர்.
ஆனால் கடவுளின் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும? நம் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னோர்கள் கூறுவது
கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தானே அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.
நம் வாழ்க்கை சிறப்பாகவும்,வாழ்க்கையில் எதாவது துன்பங்கள் இருந்தாலும் கடவுளிடம் சென்று தான் பிராத்தனை செய்வோம்.
அப்படி இருக்க நாம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனை விலக நாம் சுவாமி முன் நம் பெயரை சொல்லி அர்ச்சிப்பதால் இறைவனின் அருட்பார்வை நமக்கு கிடைக்கப்பெறும்.
பிறகு,நமது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |