நினைத்ததை நிறைவேற்றி கொடுக்கும் சர்க்கரை அம்மாள் பெண் சித்தர்..

By Sakthi Raj May 14, 2026 10:25 AM GMT
Report

பொதுவாகவே சித்தர்கள் வழிபாடு என்பது நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஒரு அற்புத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக, ஸ்ரீ சக்கரை அம்மாள் (1854 - 1901) என்பவர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு ஆன்மீக பெண் சித்தர் ஆக இருக்கிறார்.

இவருக்கு நெய்வேத்தியமாக உலர் திராட்சை படைத்து ஒருவர் வழிபாடு செய்தால் அந்த அம்மாவின் அருட்கண் பார்வை நம் மீது பட்டு நம்மோடு கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கை. இவர் ஒரு தீவிர சிவ பக்தராகவும், ஸ்ரீசக்கர வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும் இவரை சர்க்கரை அம்மாள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

நினைத்ததை நிறைவேற்றி கொடுக்கும் சர்க்கரை அம்மாள் பெண் சித்தர்.. | Chennai Thiruvanmaiyur Pen Siddhar Sarkarai Ammbal

சிறுவயதிலே இவருடைய கணவரை இழக்க நேர்ந்ததால் இவர் கணவர் இறந்த பிறகு துறவறம் சென்று ஆன்மீகத்தில் முழுமையாக அவரை ஈடுபடுத்திக் கொண்டார். பிரபல ஆன்மீக மருத்துவரான நஞ்சுண்ட ராவ் என்பவரே எழுத்தறிவு இல்லாத சர்க்கரை அம்மாவை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், இந்த சர்க்கரை அம்மாளுக்கு சுவாமி விவேகானந்தர், சேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற மகான்கள் இவரை மதித்து போற்றியுள்ளனர்.

கந்த குரு கவசம் எந்த சூழலில் எழுதப்பட்டது தெரியுமா? வியப்பூட்டும் முருகரின் அருள்

கந்த குரு கவசம் எந்த சூழலில் எழுதப்பட்டது தெரியுமா? வியப்பூட்டும் முருகரின் அருள்

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ சக்கரை அம்மாள் அஷ்டமாசித்திகளில் மிக நுண்ணிய வடிவத்தை எடுக்கக்கூடிய சக்தி, உடலை லேசாக்கி கொள்வது மற்றும் எடை அதிகம் இல்லாத லேசான பொருட்களை கணமாக்குவது நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு உடனடியாக செல்ல முடிந்த சக்தி மற்றும் கூடுவிட்டு கூடு பாய்வது போல தனது ஆன்மாவை பிறர் உடம்பில் செலுத்தும் சக்தி என்று அனைத்து சக்திகளையும் இந்த அம்மையார் பெற்றிருந்தார்.

அதோடு, ஸ்ரீ சக்கரை அம்மாள் அவருடைய இடுப்பில் நாகப்பாம்பு ஒன்றைக் கட்டி இருந்ததாகவும் கூறுகிறார்கள். இவர் 1901 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். இவருடைய ஜீவசமாதி மற்றும் ஆலயம் சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது. முடிந்தவர்கள் ஒருநாள் கட்டாயமாக இந்த சர்க்கரை அம்மாளை சென்று தரிசனம் செய்து வாழ்க்கையினுடைய கர்ம வினைகள் நீங்கி வளம் பெறுவோம்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US