தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்த 8 வயது மாணவன் சாதனை

By Sakthi Raj May 13, 2026 01:00 PM GMT
Report

நம்மை சுற்றிலும் பல திறமை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். அப்படியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஓம் என்ற எட்டு வயது மாணவன் தலைகீழாக நின்றபடி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

சிவபெருமான் வழிபாடுகளில் சிவதாண்டவ ஸ்தோத்திரம் என்பது மிகவும் புகழ் பெற்ற துதியாகும். இது சிவபெருமானின் அழகையும் அவருடைய ஆற்றலையும் புகழ்ந்து பாடக்கூடிய சங்கத மொழிப்பாடலாகவும் எதுகை மோனையில் சிறந்து விளங்க கூடியதாகவும் இருக்கிறது.

அப்படியாக, இந்தப் பாடலுக்கு சிவபெருமானே மயங்கி நடனம் ஆடினார் என்பதால் இது சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்று சொல்லப்படுகிறது.

பல்லி அனுமதி கொடுத்தால் மட்டுமே திருவிழா.. மதுரையின் விசித்திரக் கோவில்...

பல்லி அனுமதி கொடுத்தால் மட்டுமே திருவிழா.. மதுரையின் விசித்திரக் கோவில்...

இத்தகைய சிறப்புமிக்க சிவதாண்டவ ஸ்தோத்திரத்தை வெறும் எட்டு வயது ஆன ஓம் என்கின்ற மாணவன் சுவரில் சாய்ந்து கைகளை பயன்படுத்தாமல் சிராசனம் செய்து கொண்டே அவர் முழு சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை வெறும் மூன்று நிமிடங்கள் 47 வினாடிகளில் பாராயணம் செய்து உலக சாதனைகளை படைத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இது சாதனை மட்டுமல்லாமல் நினைவாற்றல் அசாதாரணமான சமநிலை சுவாச கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US