சித்திரை மாத அமாவாசை: எப்படி வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்?
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த நாளில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தான தர்மம் வழங்குவதால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
அதேபோல் தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டு சித்திரை அமாவாசை மே 07ஆம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது.
அன்றைய தினம் காலை 11.18 மணி துவங்கி, மே 08 ஆம் தேதி காலை 09.19 வரை அமாவாசை திதி உள்ளது.
மே 08ம் தேதி காலை சூரிய உதய நேரத்தின் போது அமாவாசை திதி இருந்தாலும் காலை 09.19 மணியுடன் அமாவாசை நிறைவடைந்து விடுகிறது.
அமாவாசை முடிந்த பிறகு பகல் பொழுதில் முன்னோர்களுக்கு படையல் இட்டு படைக்கக் கூடாது என்பதால், மே 07 ஆம் தேதியையே அமாவாசை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மே 07ம் தேதியன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு, புனித நீராடி விட்டு, காலை 11 மணிக்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கலாம்.
சித்திரை மாத அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் திருமணம், வேலை, தொழில் என வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட தடையும் விலகி விடும்.
வீட்டில் இருக்கம் வறுமை நிலை , நீண்ட நாள் நோய்கள் ஆகியவை நீங்கும்.
சித்திரை மாத அமாவாசையில் தானம் வழங்குவதால் அதன் பலன் இரண்டு மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |