சித்ரா பௌர்ணமி 2024: கொளுத்தும் வெயிலிலும் கிரிவலத்திற்காக திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் சித்ரா பௌர்ணமி பூஜைக்காக திரண்டுள்ளனர்.
சித்ரா பௌர்ணமி
ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமியை விட சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி மிகவும் பிரச்சித்திப் பெற்றதாகும்.
சித்ரா பௌர்ணமி எமதர்ம ராஜனின் கணக்காளரான சித்ரகுப்தர் அவதரித்த நாளாக கருதப்படுவதால், இது அவருக்குரிய வழிபாட்டு நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த நாளில் இவரை வழிப்படுவதன் மூலமாக மனதிலும், எண்ணங்களிலும் தெளிவு கிடைத்து மனக்குழப்பத்தில் இருந்து விடுப்படலாம்.
அதுமட்டுமன்றி இஷ்ட தெய்வ வழிப்பாடும் சிறப்பானதாக இருக்கும். அந்தவனையில் அனைத்து பக்தர்களும் சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்திற்கு சென்று கிரிவலத்தில் கலந்துக்கொள்வார்கள்.
இன்று அதிகாலையில் கோயிலின் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று நடைபெறுவதால். லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று கிரிவலத்தில் கலந்துக்கொண்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி தினத்தன்றும் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் தமிழ்நாடு அரசின் சார்பாக 2500 பேருந்துகளும் 6 ரயில்களும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 250 கேமராக்களும் கிரிவல பாதையை சுற்றி 350 கேமாரக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கலந்துக்கொண்டுள்ள பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலை, விழுப்புரம் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தர்மபுரி கள்ளக்குறிச்சி போன்ற பகுதியில் இருந்து சுமார் 5000 பொலிஸார்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிரிவலப் பாதையில் 105 இடங்கள் அன்னதானத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் வெயிலின் சூட்டை தணிப்பதற்காக குடிநீரும், மோரும் வழங்கப்படுகின்றன.
வெயிலின் சூடு பற்றி கவலையிடாமல் பக்தர்கள் கிரிவல பாதையில் காலணியின்றி கிரிவலம் சென்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
மாலை நேரத்தில் சித்ரா பௌர்ணமி நிலவு தெரிந்தவுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.