தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இப்பெருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.
பிரம்மாண்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
உலகின் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம்.
தொடர்ந்து 18 நாட்களும் பல்லக்கில் சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.