சித்ரா பவுர்ணமி அன்று கட்டாயமாக இதை செய்யவேண்டும்!
உலகமெங்கும் ஒலிபரப்பும் கிரகத்தின் பெயர் சந்திரன் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.சந்திரனை மனோகாரகன் என்கிறார்கள்.அதாவது மன பலத்தை கொடுப்பவர்,சத்திரன் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் அமையா விட்டால்,அவர்களுக்கு மன சஞ்சலம் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஆகையால்,பௌர்ணமி அன்று நதிக்கரைகள் கடற்கரைகளில் நின்று பூரண சந்திரனை வணங்குவது மனதிற்கு உற்சாகத்தை தரும்.
அதிலும் முழுமையான ஒளியை சிந்தும் சித்ரா பௌர்ணமி அன்று வணங்குவது இரட்டிப்பு பலன் கொடுக்கும்.
நில ஒளியில் நின்று விட்டால் மனபலம் கிடைத்து விடுமா என்ற கேள்வி எழும்பும் ?
அதனுடன் சேர்ந்து வழிபாட்டு முறைகள் ஏதேனும் இருக்க வேண்டும். அதாவது சித்ரா பௌர்ணமி நோக்கமே தீமை என்னும் இருளை விரட்டி நன்மை என்னும் வெளிச்சத்தை பெறுவதுதான்,.
இதனால் ,கோவில்களில் உள்ள சந்திரன் முன் அகல் விளக்கேற்றி வைத்து என் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி முழு வெளிச்சத்தை என் மனம் பெற்று, என் மனதையும் வாழ்க்கையையும் கலங்கமற்றதாக மாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |