பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர பரிகாரம் செய்ய வேண்டிய ஆலயம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். கணவன் மனைவி உறவு என்பது அத்தனை புனிதமானது.
இதில் பலர் வெற்றிகரமாக வாழ்க்கையை கொண்டு சென்றாலும் சிலர் திருமண வாழ்க்கையில் துன்புறுவது உண்டு. அதனால் சமயங்களில் சில தம்பதியினர் பிரிந்து செல்ல கூட நேர்ந்துவிடுகிறது.
அப்படி திருமண வாழ்வில் துன்புறும் தம்பதியினருக்கு வழிகாட்டியாக திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் பகுதியில் அமைந்திருக்கிறது "ஸ்ரீ வாஞ்சியம்" திருத்தலம்.
இந்த திருத்தலத்தில் இறைவனாக "வாஞ்சி லிங்கேஸ்வர், நாதேஸ்வரும்" இறைவியாக மங்கள நாயகி வாழவைத்த நாயகி அருள்பாலிக்கின்றனர்
தல வரலாறு
ஒரு முறை கிருத யுத்தத்தில் லட்சுமி தேவி நாராயணரிடம் கோபம் கொண்டு அவரை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்.
பிரிந்த சென்ற லட்சுமி தேவியோடு அவருடைய சக்தி அம்சங்களும் சென்று விட்டன. இதனால் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்த மஹாவிஷ்ணு கந்தாரண்யம் சென்று புண்ணிய புஷ்கரணியில் நீராடி வாஞ்சிநாதரை வழிபட்டார்.
பின்பு யோக மாயையை அழைத்து மஹாலக்ஷ்மியை அழைத்து வரச்செய்து திருமாலோடுலக்ஷ்மிதேவியை சேர்த்து வைத்தார்.
"ஸ்ரீ "என்றும் "திரு" என்றும் வழங்கப்படும் மஹாலக்ஷ்மியை விஷ்ணு வாஞ்சையில் விரும்பி சேர்ந்த இடம் என்பதால் இத்திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம், திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
பல காரணங்களால் பிரிந்து சென்ற கணவன் மனைவி இந்த தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டால் கணவன்- மனைவி இடையே இருக்கின்ற தீராத பிரச்சனைகள் கவலைகள் நீங்கி வாழ்வில் ஒற்றுமையாக வாழ்வார்கள்.
மேலும் இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இறைவனையும் இறைவியையும் வழி பட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.
தம் பக்தர்கள் விரும்பியதை அருளிச்செய்யும் வாஞ்சிநாதரை வழிபட்டு வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவோம்.