Coventry Pillaiyar: ஆற்றின் கரையோரம் அருள்பாலிக்கும் விநாயகர்
இங்கிலாந்தின் Coventry நகரில் ஆற்றின் கரையோரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் விநாயகர்.
இயற்கை எழில் சூழ அமையப்பெற்றுள்ளது சித்தி விநாயகர் ஆலயம்.
கோயிலுக்கு முன்பாக சில்வர் பெரிச் மரங்கள் இருக்கின்றன, மக்கள் தங்கள் தோஷம் நீங்க மஞ்சள் துணியில் எலுமிச்சம் பழத்தை சேர்த்து இந்த மரத்தில் கட்டி தொங்கவிடுகின்றனர்.
கோயில் வளாகத்திற்கு உள்ளே ”தேங்காய் உடைக்கும் பகுதி” அமைந்திருக்கிறது. புதிய வாகனங்களை வாங்குவோர் இங்கு வந்து தேங்காய் உடைத்து செல்வது வழமையான ஒன்றாம்.
மூஷிக வாகனத்தில் எதிரே உயர்ந்து நின்றுள்ள விமானத்தின் கீழ் கருவறையில் சித்தி விநாயகர் காட்சி தருகின்றார், ஐரோப்பா நாடுகளிலேயே இது பெரிய விநாயகர் சிலையாகும்.
விநாயகர் தவிர முருகன், துர்க்கை அம்மன் உட்பட நவக்கிரக்கங்களும் உள்ளன.
உள்ளூர் நேரப்படி தினமும் காலை 9 மணிமுதல் 2 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும் கோயில் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
கோயிலின் வருடாந்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு 10 நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவின் சிறப்பம்சம் தேர் திருவிழா ஆகும், அலங்காரம் செய்யப்பட்ட விநாயகப் பெருமான் தேரில் ஊரின் தெருக்களில் வலம்வந்து பக்தர்களுக்கு ஆசி தருகிறார்.
கோயிலின் நிர்வாகத்தினர் கலை இலக்கிய நிகழ்வுகளையும் பல்வேறு கலாசார நிகழ்வுகளையும் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.