நாளைய ராசி பலன் (01-04-2026)

Report

மேஷம்:

இன்று மேஷ ராசியினர் தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உடன் இருப்பவர்களால் நல்ல லாபம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

ரிஷபம்:

பழைய சொத்துக்களை மாற்றி புதுப்பிப்பீர்கள். நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருந்த பிரச்சனை அகலும். வேலை செய்யும் இடங்களில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

மிதுனம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கடகம்:

இன்று சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்து காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். நன்மைகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

என்று நீங்கள் எதிர்பார்த்த பொருள் உதவிகள் பெறுவீர்கள். ஒரு கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசீர்வாதம் பெற வாங்க வேண்டிய 7 ரகசிய பொருட்கள்

அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசீர்வாதம் பெற வாங்க வேண்டிய 7 ரகசிய பொருட்கள்

கன்னி:

உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் மிகவும் பொறுமையாக செயல்படுவது அவசியம். எண்ணங்களில் கவனம் வேண்டும்.

துலாம்:

இன்று செய்யும் வேலையில் பதட்டம் இன்றி செய்ய வேண்டும். பயணங்கள் வழியாக சில வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள்.

விருச்சிகம்:

சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். உங்களின் மதிப்பு சமுதாயத்தில் உயரக்கூடிய நாள். பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு:

உடன் பிறந்த சகோதரர்களால் ஆதரவும் அன்பும் நிறைந்த நாளாக இருக்கும். சிலருக்கு வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் வழியால் பொறுமை சேரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம்:

இன்று உங்கள் வாழ்க்கை துணை வழியாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். மனதில் வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் கெட்ட குணம் என்ன தெரியுமா?

உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் கெட்ட குணம் என்ன தெரியுமா?

கும்பம்:

மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் தேவையில்லாத சிந்தனைகளை அகற்ற வேண்டும். எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள்.

மீனம்:

இன்று அலுவலகப் பணியில் சில பொறுப்புகள் கூடும். உங்களுக்கு நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனையை பெற்று ஆதாயம் அடையக் கூடிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US