இன்றைய ராசி பலன் (17-04-2026)

Report

மேஷம்:

இன்று மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பாராத வாக்கு வாதம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மாலை மேல் மனதில் தெளிவு பிறக்கும்.

ரிஷபம்:

உங்கள் வீடுகளில் உங்கள் பேச்சுக்கு மரியாதை பிறக்கும் நாள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும்.

மிதுனம்:

திருமண வாழ்க்கை தொடர்பாக மனதில் இருந்து வந்த கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் உங்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.

கடகம்:

நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத விஷயம் நல்ல முடிவை பெரும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தேவை இல்லாத செலவுகள் தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

சிம்மம்:

அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இன்று எதையும் தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழும் நாள்.

கன்னி:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க பணிகளில் இருப்பவர்களுக்கு சில முக்கிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாள்.

துலாம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும். சுற்றி உள்ளவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். படிப்பு தொடர்பாக சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். நண்பர்கள் வட்டம் விரிவடையும்.

விருச்சிகம்:

தொழில் தொடர்பாக சில முக்கிய ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். பிரிந்த நட்புகளை மீண்டு சந்தித்து பேசுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

 

தனுசு:

உடல் சோர்வு உண்டாகும். உங்களை இன்று குடும்பத்தினர் சரியாக புரிந்துக் கொண்டு நடக்காமல் இருக்கலாம். தேவை இல்லாமல் சிந்திப்பதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

மகரம்:

தொடர்ந்து முயற்ச்சி செய்து ஒரு முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் கவலைகள் விலகி தைரியமாக செயல்படும் நாள். மாலை மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

கும்பம்:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணம் விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:

பொருளாதாரம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை பிறக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகள் வரலாம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US