நாளைய ராசி பலன் (21-04-2026)
மேஷம்:
இன்று மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பம் உருவாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். உடன் பிறந்தவர்களுக்கான முக்கியமான விஷயங்கள் செய்துக் கொடுப்பீர்கள். புதிய நட்புகள் பெறுவீர்கள்.
ரிஷபம்:
வீடுகளில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். தொழிலில் பணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு வாழ்க்கை மீது சில வெறுப்புகள் வரலாம். உங்களின் கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். மாலை மேல் பொழுது போக்கு விஷயங்களில் கலந்துக் கொள்வீர்கள்.
கடகம்:
குடும்பத்தில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக உங்களுக்கு புதிய வழி பிறக்கும. காவல் பணியில் இன்று கவனமாக இருக்க வேண்டும். தாயிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
கன்னி:
திருமணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவை இல்லாத வார்த்தைகள் பயன் படுத்தாதீர்கள். கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
இன்று உங்களுக்கு உடல் சோர்வு மனசோர்வு உண்டாகலாம். பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்ய சில முக்கிய விஷயங்களை பின்பற்றுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.
விருச்சிகம்:
மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். மனதில் உள்ள கவலைகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
சுற்றி உள்ளவர்களை புரிந்து நடந்துக் கொள்வீர்கள். சிலருக்கு திடீர் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.
மகரம்:
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வெளிநாடு சென்று வேலை செய்யவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்:
இன்று வாழ்க்கை தொடர்பாக சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிரிகள் விலகி செல்வார்கள்.
மீனம்:
பிள்ளைகள் எதிர்க்காலம் தேவைக்காக சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். முக்கியமான நபரிடம் இருந்து பரிசு பொருட்கள் பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |