நாளைய ராசி பலன் (25-04-2026)
மேஷம்:
இன்று வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களிடம் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள்.
ரிஷபம்:
முடிந்த வரை உங்களின் சிந்தனையில் கவனமாக இருங்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். குடும்பத்தில் சற்று அனுசரித்து செல்வது மகிழ்ச்சியான சூழ்நிலை கொடுக்கும்.
மிதுனம்:
தொலைதூர பயணம் செல்லும் பொழுது உடைமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.
கடகம்:
உங்களின் கடமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகிச்செல்லும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள்.
சிம்மம்:
யாரிடமும் தேவை இல்லாமல் விவாதம் செய்யாதீர்கள். வாழ்க்கை துணையிடம் சற்று கவனமாக பேசுவது அவசியம். பிடித்த நபர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். நன்மையான நாள்.
கன்னி:
திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தாய் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு தொடர்பான விஷயம் ஆதாயம் கொடுக்கும்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். உடல் சோர்வு மன சோர்வு நீங்கள் தியானம் செய்வது அவசியமாகும். புதிய நட்புக்களின் அறிமுகத்தால் ஒரு சிலருக்கு புதிய வாய்ப்புகள் தொழிலில் கிடைக்கும்.
விருச்சிகம்:
குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். கணவன் வீட்டு வழியால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். ஒரு சிலர் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு:
வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மீகத்திலும் ஆலய வழிபாடுகளிலும் பங்கு கொள்வீர்கள். இந்த பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.
மகரம்:
தேவையில்லாமல் உங்களுடைய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் சேமிப்பு அதிக கவனம் செலுத்துவீர்கள்.
கும்பம்:
எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களை செய்து கொள்வீர்கள். வருமானத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மீனம்:
சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். முடிவெடுப்பதில் சில தயக்கம் ஏற்படலாம். குழந்தைகளைப் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். வேலை தொடர்பாக சில மன கஷ்டம் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |