நாளைய ராசிபலன் (06-08-2026)

Report

மேஷம்:

இன்று சகோதரர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

ரிஷபம்:

வேலையில் சில மாற்றமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். பிறமொழி பேசும் மனிதர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்:

இன்று பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும். சேமிப்பு தொடர்பான மன அழுத்தம் வரலாம்.

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

கடகம்:

உறவினர்கள் வழியாக நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். அரசு அதிகாரிகளுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கலாம்.

சிம்மம்:

உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் முக்கிய நபர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். திட்டமிட்ட காரியம் நடைபெறும்.

கன்னி:

வேலையில் உங்களுடைய திறமைக்கேற்ற மதிப்பு கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள். முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும்.

துலாம்:

குடும்ப உறுப்பினர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் அவசியம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு வந்து சேரும்.

விருச்சிகம்:

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாகனத்தை மாற்றுவது பற்றிய யோசனை உண்டாகும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும் நாள்.

2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ

2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ

தனுசு:

குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்:

வேலையில் பணிகளை விரைவில் முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களை சற்று அனுசரித்து செல்வது அவசியம். ஆபரண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

வித்தியாசமான சிந்தனைகளால் நீங்கள் ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய இலக்குகளை அடைவதற்கான வழி பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்:

இன்று வாக்குறுதி யாருக்கும் கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US