2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ

By Sakthi Raj Aug 05, 2026 10:28 AM GMT
Report

ஆடி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய வழிபாடாக இருக்கிறது. அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உரிய முக்கியமான விரத தினங்களில் கிருத்திகை விரதமும் ஒன்று. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை இன்னும் கூடுதல் விசேஷத்தை பெறுகிறது.

உங்கள் வாழ்க்கையில் தடைகள், நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற வேண்டும், நினைத்த காரியம் நடக்க வேண்டும், திருமண வரன் கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்றால் நிச்சயம் ஆடி கிருத்திகையை நீங்கள் தவற விடாதீர்கள்.

அதாவது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தால் வேண்டிய காரியம் உடனடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ | 2026 When Is Aadi Krithigai August 6 Or 7

ஆகஸ்ட் மாதம் கொண்டாடக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் என்ன

ஆகஸ்ட் மாதம் கொண்டாடக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் என்ன

2026 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை எப்பொழுது:

கிருத்திகை நட்சத்திரம் துவக்கம் ஆகஸ்ட் 06 மாலை 06.18,
கிருத்திகை நட்சத்திரம் நிறைவு ஆகஸ்ட் 07 மாலை 04.51.

கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை தான் துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 6 ஆகஸ்ட் 7 இந்த இரண்டு தினங்களில் எந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்று ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். கிருத்திகை விரதம் என்பது பரணி நட்சத்திரத்தில் துவங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் நிறைவு செய்ய வேண்டும்.

2026: ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதியா?முழு விவரங்கள் இதோ | 2026 When Is Aadi Krithigai August 6 Or 7

உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்

உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்

அந்த விதியின் அடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று தான் பரணி கார்த்திகை என என இரண்டு நட்சத்திரங்களின் உள்ளது.

அதனால் அந்த தினத்தில் விரதம் இருக்கலாம் திருத்தணி போன்ற பெரும்பாலான முருகன் ஆலயங்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி தான் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படவுள்ளது சில கோவில்களில் பூஜை விதிகள் மாறும் என்பதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US