நாளைய ராசி பலன்(26-12-2025)
மேஷம்:
பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய பொன்னான நாள். பூர்விக சொத்தில் இருந்த சிக்கல் விலகும்.
ரிஷபம்:
உங்களுடன் இருப்பவர்களுக்கு உங்கள் மீது ஒரு சில பொறாமை குணம் வரலாம். மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
இன்று பொருளாதார ரீதியாக சில மன குழப்பங்கள் சந்திப்பீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் போகலாம். ஒருவரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை.
கடகம்:
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் நீங்கள் மிகவும் நேர்மையாக செய்ய வேண்டும். நட்பு ரீதியாக நீங்கள் புதிய அனுபவங்களை பெறப் போகிறீர்கள். மனதில் உள்ள குழப்பம் விலகும்.
சிம்மம்:
உங்களுடைய மனம் சொல்லுகின்ற விஷயங்களை சற்று கவனித்து செயல்படுங்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிய நட்பின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி:
உடல் ரீதியாக சந்தித்த பிரச்சினைகள் எல்லாம் விலகும். அரசு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருக்கும். எதிர்ப்புகளை மீறி செயல்படக்கூடிய நாள்.
துலாம்:
புதிய விஷயங்களில் உங்களுடைய மனதை ஈடுபடுத்துவீர்கள். வருமான உயர்வை பற்றி இன்று சிந்திக்க கூடிய நாள். கடன் சார்ந்து இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் விலகும்.
விருச்சிகம்:
தாய் வழி சொந்தங்களால் உங்களுக்கு ஒரு சில பிரச்சனைகள் வரலாம். எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
தனுசு:
குடும்பத்தினருடன் முக்கியமான சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் எண்ணியதை நிறைவேற்றக்கூடிய அற்புதமான நாள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
மகரம்:
தம்பதிகளுக்குள் சிறு சிறு சண்டைகளும் வாக்குவாதங்களும் வரலாம். பழைய பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்பு உயரும்.
கும்பம்:
குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உங்களைப் பற்றி வரக்கூடிய விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது நிதானம் தேவை.
மீனம்:
நினைத்த நேரத்தில் உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |