இன்றைய ராசி பலன் (31-01-2026)
மேஷம்:
வெளியூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு சில தடைகள் வரலாம். உங்கள் வீடுகளில் இருந்த வந்த விரிசல் சரி ஆகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுங்கள்.
ரிஷபம்:
உங்கள் வீடுகளுக்கு திடீர் விருந்தினர் வருகை தரலாம். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு எதிர்ப்பாராத மன கசப்புகள் வரலாம். குழந்தைகளால் உங்களுக்கு பெருமை சேரும் நாள்.
மிதுனம்:
மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் எதிர்பாராத நபரை சந்திக்க கூடிய நிலை வரலாம். உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் சொந்த விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கடகம்:
திடீர் பண வரவு கிடைக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
சிம்மம்:
காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். சிலருக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷ்யங்களை செய்து முடிப்பீர்கள்.
கன்னி:
திருமணம் தொடர்பான விஷயங்களில் பங்கு கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு அதரவு கொடுப்பார்கள். தாய் உடல் நிலையில் சற்று பின்னடைவு வரலாம். சற்று கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
துலாம்:
எதையும் சமநிலையோடு அணுகும் பக்குவம் வளர்த்து கொள்வீர்கள். நீங்கள் இந்த உலகத்தை பார்க்கும் சிந்தனை சற்று வேறாக மாறும். உங்களுக்கு சமுதாயத்தில் மரியாதை உயரும் நாள்.
விருச்சிகம்:
தேவை இல்லாமல் யாரிடமும் கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்தவர்கள் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள். மதியம் மேல் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
தனுசு:
குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்களும் பிரச்சனைகளும் வரலாம். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
மகரம்:
வெளியே செல்லும் பொழுது உடமைகளில் கவனமாக இருங்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று இணைய சில ஏற்பாடுகள் செய்வீர்கள்.
கும்பம்:
தேவை இல்லாத வாக்கு வாதங்களும் பிரச்சனைகளும் யாரிடமும் வைத்து கொள்ளாதீர்கள். வீடு கட்ட வேண்டும் என்றும் போடும் கணக்குகள் சரியாக அமையும். சமுதாய பணிகளில் பங்கு கொள்ளும் ஆர்வம் உண்டாகும்.
மீனம்:
நண்பர்களுடன் பேசும் பொழுது சற்று கவனமாக இருங்கள். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் கவலை உண்டாகும். உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும் நாள். நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |