நாளைய ராசி பலன் (26-03-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு தேவை இல்லாத மன குழப்பங்கள் சந்திக்க நேரலாம். குழந்தைகளால் மதிப்பு உயரும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மதியம் மேல் எதிர்பாராத நற்செய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலை காண்பீர்கள். நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள்.
மிதுனம்:
நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றங்களை சந்திப்பீர்கள். சுற்றி உள்ள நண்பர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று சக ஊழியர்கள் இடத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். இன்று நீண்ட நாட்கள் மனதில் இருந்து வந்த கசப்பான விஷயங்களுக்கு விடை தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்:
அரசியல் தொடர்பாக நீங்கள் சில பண இழப்புகளை சந்திக்க நேரலாம். சமூக பணிகளில் பங்கு கொள்வீர்கள். ஆன்மீக வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
கன்னி:
எதிர்காலம் சார்ந்த யோசனைகள் சந்திப்பீர்கள். உறவினர்கள் இடையே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுடைய புகழ் வெளிப்படக்கூடிய நாள். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள்.
துலாம்:
இன்று மனதளவில் தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் மகிழ்ச்சியும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் மீது அதிக அன்பு செலுத்துவார்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் சில ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். புதிய நபர்களால் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்க கூடிய நாள். மதியமேல் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
தனுசு:
இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய பயணங்கள் வழியாக புதிய நட்புகளை பெறுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேரும் நாள்.
மகரம்:
இன்றைய உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். சுற்றி உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய நாள்.
கும்பம்:
இந்த பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் நன்மை தரும்.
மீனம்:
தொழில் சார்ந்த பிரச்சினைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். அரசு வழியில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். சிலர் வீடுகளில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |