இன்றைய ராசிபலன்(27-10-2026)
மேஷம்:
தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வர போகிறது. உடல் சோர்வு விலகும். நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சகோதரர் வழியில் நற்செய்தி வந்து சேரும்.
மிதுனம்:
இன்று திருமண வாழ்க்கை தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்தை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உண்மையை மறைத்து பேசுவதால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கடகம்:
தாய்வழி உறவுகளால் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக நீங்கள் அமைதியாக கையாள்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்:
தேவை இல்லாமல் ஒருவரிடம் வாக்கு கொடுக்காதீர்கள். சமுதாயத்திற்காக ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்தால் இழப்புகளை குறைக்கலாம். கட்டுப்பாடாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி:
இன்று மூன்றாம் நபருடைய வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையீடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அனுசரித்து செல்வது அவசியம்.
துலாம்:
இன்று எதையும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய பக்குவம் பெற்றுக் கொள்வீர்கள். மனதில் இருக்கக்கூடிய பயம் விலகி தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த இடத்தில் பணம் வந்து சேரும்.
விருச்சிகம்:
மனச்சோர்வு விலகும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தை உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிடிக்காதவர்கள் விலகிச் செல்வார்கள்.
தனுசு:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினர் உடைய ஆதரவால் முக்கியமான விஷயத்தை முடிப்பீர்கள்.
மகரம்:
தொழிலில் எதிரியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். யாரிடமும் தேவையில்லாத பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்:
தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது அவசியம். வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
மீனம்:
எதையும் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவது முக்கியம். குடும்பத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை ஒரு நல்ல முடிவைப்பெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |