நாளைய ராசிபலன் (17-09-2026)
மேஷம்:
இன்று வேலை ரீதியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனக்குறைவால் முக்கியமான விஷயங்களை இழந்து விட நேரலாம். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
தொழில் ரீதியாக இங்கு சந்தித்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.
மிதுனம்:
எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது அவசியம். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தந்தை ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கடகம்:
கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். யாரை நம்பியும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
சிம்மம்:
சொத்து விவகாரங்களில் மூன்றாம் நபருடைய தலையிடலை கொண்டு வராதீர்கள். அரசியலில் இருப்பவர்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
கன்னி:
எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என்பதால் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
துலாம்:
நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து முடிப்பீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் வந்து சேரக்கூடிய நாள். விலகி சென்றவர்களும் உங்களிடம் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் வாழ்க்கை பற்றிய கவலைகளுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும்.
தனுசு:
பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விலகும். குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய யோசனை உருவாகும். மனதெளிவு பிறக்கும்.
மகரம்:
இன்று அரசியல் தொடர்பாக நீங்கள் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வேலை ரீதியாக உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். காரியத்தில் வெற்றி உண்டு.
கும்பம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். கவன சிதறல்கள் குறைத்துக் கொள்வது அவசியம். வெளிவட்டாரம் விரிவடையும்.
மீனம்:
உங்களுடைய கல்வியில் ஏற்பட்ட தடை விலகும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணத்தட்டுப்பாடும் பணக்கஷ்டமும் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |