ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் வாழ்க்கை போராட்டமா இருக்குமா?
பொதுவாக, சனி பகவான் என்றாலே கர்ம காரகன் என்று சொல்வது உண்டு. அந்த வகையில், ஜோதிடத்தில் பனிரெண்டாம் இடம் என்பது ஒருவருடைய தூக்கம் மற்றும் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கக்கூடியது.
அந்த இடங்களில் சனி பகவான் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவும் கடினமானதாகவும் நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருக்க கூடும் என்று ஒரு கருத்தும் உண்டு. அப்படியாக, பனிரெண்டாம் வீட்டில் சனி பகவான் இருந்தால் அந்த நபருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

ஜாதகத்தில் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவான் இருக்கின்ற பொழுது அவர்கள் வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வேலை பார்க்கக் கூடிய அமைப்பு அங்கு சென்று அவர்கள் வேலை பார்த்து உயர்ந்த நிலைக்கு வர கூடிய அமைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது.
அது மட்டும் அல்லாமல் இவர்கள் எப்பொழுதும் கட்டாயமாக நான்கு நபர்கள் தெரிந்து இருக்கும் படியான ஒரு பிரபலமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளும் தேடி வருவதற்கான நிலை உள்ளது.

அதிலும் 12 ஆம் வீட்டு சனி ஆட்சி உச்சம் அடைந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பலன் இருக்கும்.
ஒரு சிலர் சொல்வது உண்டு நான் என் சொந்த ஊரையே தாண்டவில்லை என்று எண்ணினாலும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தன் இடத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்யக்கூடிய ஒரு ஆன்மீகப் பயணம் ஆவது அமையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |