நாளைய ராசிபலன் (19-09-2026)

Report

மேஷம்:

தொழில் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.

ரிஷபம்:

இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரலாம். முக்கிய நபரை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

வேலை ரீதியாக இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

கடகம்:

தாய்வழி உறவுகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:

உடன்பிறந்தவர் வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நினைத்தது போல் நடக்கும். வியாபாரம் நல்ல லாபம் பெறும்.

கன்னி:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தை வழி உறவுகளால் சில மனக்கசப்புகள் வரலாம்.

துலாம்:

உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களைப் பற்றி புரிந்து கொள்ளக்கூடிய நாள். ஒரு முக்கியமான வேலை எந்த தடையும் இன்றி சரியாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு சில குழப்பங்களும் தடைகளும் வரலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்

வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்

தனுசு:

குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாத விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

இன்று உயர் பதவியில் இருந்தவர்களுடைய நட்பு கிடைக்கும். அரசியல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். வேலையில் நல்ல முன்னேற்றமும் ஆதாயமும் பெறுவீர்கள்.

கும்பம்:

வெளிவட்டாரங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். சினிமா துறையில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேறு மொழி பேசும் நபர்களை சந்திப்பீர்கள்.

மீனம்:

இன்று வழக்கு விஷயமாக நீங்கள் ஒரு முக்கியமான நபரை சந்திக்க நேரலாம். வேலையில் மன அமைதியை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையால் சந்தித்த பிரச்சனை விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US