2026: புரட்டாசி மாதத்தில் தவறவிடக்கூடாத விஷேச நாட்கள்.. முழு விவரம் இதோ

By Sakthi Raj Sep 18, 2026 06:26 AM GMT
Report

புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம் ஆகும். அதோடு நம் முன்னோர்களை நினைவுகூரும் மகாளய பட்சத்திற்கும், அம்பிகை அருள்பாலிக்கும் நவராத்திரிக்கும் பெயர் பெற்ற மிக முக்கியமான ஆன்மீக மாதம் ஆகும்.

இந்த மாதத்தில் தலைமை கிரகமான சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். அந்த வகையில் இந்த மாதத்தில் வரக்கூடிய சிறப்புகள் பற்றி பார்ப்போம்.

பெருமாள் வழிபாடு: திருப்பதி எழுமையான் குன்றின் மீது அவதாரம் செய்த மாதமாக புரட்டாசி கருதப்படுகிறது. ஆதலால் புரட்டாசி சனிக்கிழமை மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

2026: புரட்டாசி மாதத்தில் தவறவிடக்கூடாத விஷேச நாட்கள்.. முழு விவரம் இதோ | 2026 Important Days In Purattasi Month

ஐந்து சனிக்கிழமைகள்:

இந்த 2026 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் மொத்தம் ஐந்து சனிக்கிழமைகள் வருகிறது. அதனால், இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி தோஷம் அல்லது சனியினால் பாதிப்பு கொண்ட நபர்கள் இந்த மாத சனிக்கிழமைகளில் மனதார விரதம் இருந்து பகவானை வழிபாடு செய்ய நற்பலன்கள் கிடைக்கும்.

மகாளய பட்சம்:

இந்த புரட்டாசி மாதத்தில் மிக முக்கியமான நாளாக முன்னோர்களை வழிபாடு செய்யக்கூடிய மகாளய பட்ச காலம் இருக்கிறது, அதாவது செப்டம்பர் 27 துவங்கி பதினைந்து நாட்கள் முன்னோர்களை வழிபட உகந்த மகாளய பட்ச காலமாகும்.

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இது அக்டோபர் 10 மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது. நவராத்திரி தொடக்கம்: மேலும், புரட்டாசியில் அம்பாளுக்கு மிக உகந்த ஒன்பது நாள் விரதமான சாரதா நவராத்திரி அக்டோபர் 11ஆம் தேதி அன்று துவங்குகிறது.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விசேஷ நாட்களின் விவரம்:

செப்டம்பர்:

18-புரட்டாசி 1 புரட்டாசி மாதப் பிறப்பு

19-புரட்டாசி 2 ஒன்றாம் புரட்டாசி சனிக்கிழமை

22-புரட்டாசி 5 வளர்பிறை ஏகாதசி

24-புரட்டாசி 7 வளர்பிறை பிரதோஷம்

26-புரட்டாசி 9 இரண்டாம் புரட்டாசி சனிக்கிழமை / பௌர்ணமி

27-புரட்டாசி 10 மகாளய பட்சம் ஆரம்பம் (தேய்பிறை பிரதமை)

அக்டோபர்:

03-புரட்டாசி 16 மூன்றாம் புரட்டாசி சனிக்கிழமை

06-புரட்டாசி 19 தேய்பிறை ஏகாதசி

08-புரட்டாசி 21 தேய்பிறை பிரதோஷம்

09-புரட்டாசி 22 மாத சிவராத்திரி

10-புரட்டாசி 23 மகாளய அமாவாசை / நான்காம் புரட்டாசி சனிக்கிழமை

11-புரட்டாசி 24 சாரதா நவராத்திரி ஆரம்பம்

14-புரட்டாசி 27 வளர்பிறை சதுர்த்தி

16-புரட்டாசி 29 சஷ்டி விரதம்

17-புரட்டாசி 30 ஐந்தாம் புரட்டாசி சனிக்கிழமை / மாத இறுதி நாள்

2026: புரட்டாசி மாதத்தில் தவறவிடக்கூடாத விஷேச நாட்கள்.. முழு விவரம் இதோ | 2026 Important Days In Purattasi Month

புரட்டாசி மாதத்தில் இந்த ஒரு வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்

புரட்டாசி மாதத்தில் இந்த ஒரு வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்

இந்த 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மகாளய அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வருவதால் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்தியும் பெருமாளுடைய அருளும் நமக்கு ஒரே நாளில் கிடைக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பாகும்.

மேலும், தை மற்றும் ஆடி மாத அமாவாசையை விடவும் மிகச்சிறந்த நாளாக இந்த மகாளய அமாவாசை உள்ளது. இந்த நாளில் நாம் அன்னதானம் செய்யலாம். நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்கின்ற பொழுது நம்முடைய பரம்பரை தோஷம் யாவும் விலகும்.

அதோடு, அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை பிரதமை திதியில் நவராத்திரி விரதம் துவங்குகிறது. இந்த நாட்களில் வீடுகளில் கொலு வைத்து முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தை தவிர விடாமல் வழிபாடு செய்து பெருமாள் மற்றும் முன்னோர்களுடைய அருள் ஆசையை பெறுவோம்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US