வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்
ஒருவர் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்தோடு இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த வீட்டில் தரித்திரம் நுழைந்து விடும் அதன் பிறகு வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு பொருளாதாரம் இழப்பு, நிம்மதியின்மை நல்ல உறக்கமின்மை போன்ற சூழலில் நாம் வாழ வேண்டிய நிலை வந்துவிடும்.
அந்த வகையில், வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய சில முறைகளை பற்றி பார்ப்போம்.

நாம் குடும்பத்துடன் வருடம் ஒருமுறையாவது புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர வேண்டும். அதிலும் திருச்செந்தூர் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று புனித கடலில் நீராடுவது அவசியம்.
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6 மணி முதல் ஏழு மணியிலான அந்த சுக்கிர ஹோரையில் வீட்டில் இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்றுக் கொடுப்பதோடு லட்சுமி கடாட்சத்தை பெறுகின்றோம்.

முக்கிய நாட்களாக கருதக்கூடிய பவுர்ணமி மற்றும் அமாவாசை சஷ்டி சதுர்த்தி போன்ற நாட்களில் மாலை நேரங்களில் தூபம் போட்டு வழிபாடு செய்வது நமக்கு வீடுகளில் எதிர்மறை சக்திகள் சூழ்வதில் இருந்து காப்பாற்றுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |