நாளைய ராசிபலன் (10-09-2026)

Report

மேஷம்:

நீண்ட நாட்கள் ஆசை நிறைவேறும். குழந்தைகளுடைய எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் உயரும். ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:

இன்று உறவினர்கள் வழியே நல்ல அனுகூலம் உண்டாகும். விரும்பிய உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் முற்றிலும் விலகும்.

மிதுனம்:

உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ப நல்ல பலன் பெறுவீர்கள். புதிய அனுபவங்கள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள்.

கடகம்:

குடும்பத்தில் ஒத்துழைப்பும் ஆதரவும் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனை வரும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடு விலகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

ராகு எந்த நடச்சத்திரத்தில் இருக்கிறார்? உங்களுக்கு பணம் எந்த வழியில் சேரும் தெரியுமா?

ராகு எந்த நடச்சத்திரத்தில் இருக்கிறார்? உங்களுக்கு பணம் எந்த வழியில் சேரும் தெரியுமா?

சிம்மம்:

வீட்டினுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிடிவாதம் இன்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதால் வெற்றி அடையலாம். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி:

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையலாம். சகோதரரை அனுசரித்து செல்வது அவசியம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் குறையும்.

துலாம்:

பொருளாதார தொடர்பான இருந்த நெருக்கடிகள் விலகும். உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் தேடி வரும். மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிகம்:

சகோதர வழியே உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளில் மீதான ஈர்ப்புகள் வரலாம். குடும்பத்தில் அமைதியான சூழலை காணப்படும்.

தனுசு:

எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

மகரம்:

மனதிற்கு பிடித்தவர்கள் வழியாக நற்செய்தி வந்து சேரும். குடும்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்:

உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியே நல்ல உதவிகள் கிடைக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். திறமைகளை வெளிப்படுத்தும் நாள்.

மீனம்:

பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலும் விலகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். சமுதாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US