இன்றைய ராசி பலன்(02-07-2025)
மேஷம்:
ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு மதியம் உடல் நிலையில் சிறு சங்கடம் உருவாக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.
ரிஷபம்:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் பிரச்சனைகள் செய்ய வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் நபரால் சில தொந்தரவுகள் சந்திக்கவேண்டிய நிலை உருவாகலாம்.
மிதுனம்:
இன்று குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இல்லாமல் போகலாம். மன அழுத்தம் குறைய இறைவழிபாடு சிறந்த பலனைத்தரும்.
கடகம்:
பிரிந்த உறவுகள் மீண்டும் உங்களை வந்து சேருவார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல் ஒரு நல்ல முடிவைப் பெரும். நன்மையான நாள்.
சிம்மம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகும் நிலை வரலாம். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி:
இன்று மாணவர்கள் படிப்பில் கட்டாயம் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீண்ட வருடங்களுக்கு பிறகு உங்கள் பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் சந்தோசம் உண்டாகும்.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் கட்டாயம் நல்ல முறையில் கவனம் செலுத்த வேண்டும். விலகி சென்ற உறவுகள் உங்களை மீண்டும் தொடர்புக் கொண்டு பேசுவார்கள். வருமான நிலை உயரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்ததாக இருக்கும். துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள்.
தனுசு:
பிள்ளைகள் உடல்நிலை சரி இல்லாமல் போகலாம். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது நன்மை வழங்கும். அக்கம்பக்கத்தினரிடம் வாக்கு வாதம் செய்யவேண்டாம்.
மகரம்:
ஒரு சிலருக்கு இன்றைய நாள் முழுவதும் மிகவும் சோர்வாக இருக்கலாம். நல்ல உறக்கம் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். முன்னோர்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
கும்பம்:
பணியிடத்தில் பணிகள் ஆனது அதிகமாக காணப்படும். இதனை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். நாளை பணவரவு ஆனது அதிகமாக காணப்படும்.
மீனம்:
இன்று தவறான புரிதலால் சில சங்கடங்களுக்கு ஆளாக நேரலாம். உடன் பிறந்தவர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார சிக்கல் விலகும். வாழ்க்கை வளமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |