நாளைய ராசிபலன் (05-10-2026)

Report

மேஷம்:

மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையும். குடும்ப விஷயங்களில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். வேலையில் சில பிரச்சினை வந்து விலகும்.

ரிஷபம்:

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மனதில் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். வாழ்க்கை துணையிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

எண் கணிதம்: வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வர என்ன செய்ய வேண்டும்?

எண் கணிதம்: வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வர என்ன செய்ய வேண்டும்?

மிதுனம்:

இன்று சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் மாற்றம் உண்டாகும்.

கடகம்:

கலைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய பார்வை பிறக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமையான நாள். நிதானமாக செயல்பட்டால் நல்லது.

சிம்மம்:

ஒரு சிலருக்கு ஆலய வழிபாடுகளில் அதிக ஆர்வம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கவனம் வேண்டும்.

கன்னி:

மனதளவில் இருந்த கவலைகள் விலகும். பணவரவுகளில் இருந்து வந்து நெருக்கடிகள் குறைந்து காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். மனநிறைவான நாள்.

துலாம்:

வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:

இன்று உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும்.

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

தனுசு:

பொறுமையுடன் செயல்படுவது அவசியம். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். செய்யும் வேலைகளில் சற்று விழிப்புணர்வு அவசியம்.

மகரம்:

வாழ்க்கை துணையிடம் நல்ல புரிதல் உருவாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

எதிர்பாராத உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உறவினர்கள் ஆறுதல் கிடைக்கும்.

மீனம்:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகளை பெறுவீர்கள். சுபகாரியை பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மனதில் நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US