நாளைய ராசிபலன் (09-08-2026)
மேஷம்:
இன்று காலை முதல் மனதில் ஒரு சிறிய குழப்பம் தோன்றி மறையும். மதியம் மேல் வேலைப்பளு அதிகரிக்கலாம். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு ஆலய வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு உண்டாகலாம்.
மிதுனம்:
கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். முக்கியமான முடிவு எடுப்பதில் ஒரு சில சிரமங்களை சந்திக்கலாம். தாய்மாமனிடம் தேவையில்லாத வாக்குவாதம் வேண்டாம்.
கடகம்:
சொந்தங்கள் மத்தியில் யார் எப்படி என்று தெரிந்து கொள்வீர்கள். அத்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
தொழில் ரீதியாக ஒரு சில கசப்புகள் வரலாம். தாயிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சொத்து பிரச்சனைகள் தடுப்பதற்கு அமைதி காப்பது அவசியம்.
கன்னி:
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறிய முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கால் வலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.
துலாம்:
தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்:
உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் உண்டாகும்.
தனுசு:
குடும்பத்தில் நற்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இன்று கூடுதல் கவனமாக செயல்படுவது அவசியம். சகோதரர் வழியே ஆறுதல் கிடைக்கும்.
மகரம்:
நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் சில கவன சிதரல் வரலாம்.
கும்பம்:
அரசு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். புதிய சொத்து சேர்க்கை தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்:
குடும்பத்தினர் உங்கள் பேச்சிக்கு மதிப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டிற்கு முக்கிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் காணப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |