மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த தெய்வத்தை மட்டும் வழிபாடு செய்யாதீர்கள்
தற்பொழுதைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிக அளவில் காணப்படுகிறது. அந்த வகையில், நாம் மன அழுத்தத்தில் இருக்கின்ற பொழுது நம்முடைய மனமானது ஆறுதல் நோக்கி ஓடுகின்றது. செய்வதறியாத ஒரு நிலையில் நிற்கிறது.
அப்பொழுது, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இறைவழிபாடு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஆனால், அந்த நேரங்களில் நாம் வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் நம்முடைய மனநிலை மாற்றங்களுக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்படியாக, மன அழுத்தம் என்பது நிச்சயமாக பல நேரங்களில் இழப்பு, அவமானம், துரோகம் போன்ற ஒரு சூழ்நிலையில் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே நம்முடைய மனம் இந்த இழப்புகளால் வாழ்க்கையின் போராட்டங்களால் மனவிரக்தி அதிக அளவில் கோபம் கொண்டிருக்கும்.
அந்த நேரங்களில் முடிந்த அளவிற்கு நம்முடைய மனதை சாந்தப்படுத்துவதற்கு அமைதியை தரக்கூடிய தெய்வத்தை நாடிச் செல்வது அவசியமாக உள்ளது. அந்த நேரங்களில் நாம் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யலாம்.

விநாயகர் வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வது அந்த மந்திர ஒலிகள் நம்முடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடு உதவியாக இருக்கிறது. இருப்பினும் முடிந்த அளவிற்கு மன அழுத்தத்தில் இருக்கின்ற நேரத்தில் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
உக்கிரமான தெய்வங்கள் நமக்கு அமைதியை தர மாட்டார்கள் என்பது இல்லை நம்முடைய மனக்கோபம், மன அழுத்தம் உக்கிரமான தெய்வத்தினுடைய சக்தியை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெறுவது இல்லை. ஆதலால், ஒரு சில தடுமாற்றம் வரலாம். அதனை தவிர்ப்பதற்கு நாம் சாந்தமான தெய்வங்களை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |